181 கால் சேவை ஜெ.பாணியில் துவங்கிய பழனிச்சாமி.!

ஜெ. உடல் நிலையை சரியில்லாத காரணத்தினால் இந்த முறையை பின்பற்றியதாகவும், தற்போது முதல்வர் பழனிச்சாமி நல்ல நிலையில் இருக்கும் போது, ஏன் இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி

|

பெண்களின் பாதுகாப்புக்காக 181 என்னும் புதிய இலவச தொலைபேசி சேவை எண்ணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவங்கி வைத்தார்.

இந்த திட்டம் வீடியோ காண்பரன்சிங் முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே அதிக முறை வீடியோ காண்பரங்சிங்கை
பயன்படுத்தினார்.

181 கால் சேவை ஜெ.பாணியில் துவங்கிய பழனிச்சாமி.!

தற்போது, இந்த முறையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கையாள துவங்கியுள்ளார்.

ஜெ. உடல் நிலையை சரியில்லாத காரணத்தினால் இந்த முறையை பின்பற்றியதாகவும், தற்போது முதல்வர் பழனிச்சாமி நல்ல நிலையில் இருக்கும் போது, ஏன் இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா:

தமிழகத்தில் 5 முறை முதல்வர் பதவியில் அமர்ந்தவர் ஜெயலலிதா. இவர் முதல்வராக இருக்கும் பல்வேறு முறை 110 விதியின் கீழும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

முதலமைச்சர்களில் அதிகம் வீடியோ காண்பரன்சிங் (தொலை தூரத்தில் இருந்து காணொலி மூலம் திட்டங்களை துவங்கி வைத்தல்) முறையில் திட்டத்தை துவங்கி வைத்தார்.

உடல் நிலை சரியில்லாமை:

உடல் நிலை சரியில்லாமை:

முதல்வர் ஜெயலிலதா 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் நங்கூரமிரட்டு அமர்ந்தார்.
அப்போது அவரது உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போனது. மேலும், நேரமின்மை காரணமாகவும் அப்போது, அறிவித்த திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ காண்பரன்சிங்கை முறையில் துவங்கி வைத்தார்.

அதிக முறை பயன்படுத்தினார்:

அதிக முறை பயன்படுத்தினார்:

இந்தியாவில் அதிக முறையை வீடியோ காண்பரன்சிங் முறையை பயன்படுத்தியவர்களில் ஒருவராக முதல்வர் ஜெயலலிதா இருக்கின்றார். இதன் மூலம் நேரில் சென்று வரும் போது, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளும் குறைந்ததாகவும் சொல்லப்பட்டது. முதல்வரின் நேரமும் சேமிக்கப்பட்டது.

முதல்வர் மறைவு:

முதல்வர் மறைவு:

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், எடப்பாடி பழனிச்சாமி அதே பாணியில் வீடியோ காண்பரன்சிங் முறையை கைப்பிடித்து வருகின்றார்.
ஒரு சில திட்டங்களை அறிவிக்கும் போது, வீடியோ காண்பரன்சிங் திட்டத்தையும் முதல்வர் பயன்படுத்தி வருகின்றார்.

181 திட்டம்:

181 திட்டம்:

பெண்களின் பாதுகாப்புக்கா 181 என்ற சேவை தமிழகத்தில் நேற்று துவங்கப்பட்டது. இதற்காக முதல்வர் பழனிச்சாமி வீடியோ காண்பரன்சிங் முறையில் சேவை மையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

மற்ற மாநிலங்கள்:

மற்ற மாநிலங்கள்:

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கவும், ஆலோசனை பெறவுமான 181 என்ற தொலைபேசி சேவை டெல்லி குஜராத் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

அம்மா கால் சென்டர்:

அம்மா கால் சென்டர்:

இந்நிலையில் தமிழகத்தில் இந்த சேவையைத் தொடங்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டரின் ஒரு பகுதியில் 181 சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எந்த மாதிரியான புகார்கள்:

எந்த மாதிரியான புகார்கள்:

இந்த மையத்தில் காவல்துறை, சட்டத்துறையினர், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோர் இருப்பார்கள். இந்த மையத்தில் குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, ஈவ் டீசிங், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம்.

உடனுக்குடன் தீர்வு:

உடனுக்குடன் தீர்வு:

பெண்கள் தொடர்பான அரசு திட்டங்கள், சேவைகள் குறித்த ஆலோசனைகளையும், உடல் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனைகளையும் இந்த மையத்தின் மூலம் பெற முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இந்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பெண்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தொடரும் வீடியோ கான்பரன்சிங்:

தொடரும் வீடியோ கான்பரன்சிங்:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தமுறையை கையாண்டு வருகின்றார். இதில் அலுவலகத்தில் இருந்து கொண்டு அரசு பணிகளையும் முடிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த வீடியோ காண்பரன்சிங் முறை முதல்வருக்கு உதவுகின்றது.

Best Mobiles in India

English summary
TN CM Edappadi Palanisamy to inaugurate 181 women : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X