இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

|

டைட்டன் நிறுவனம் கடிகாரத்துறையில் உலகளவில் ஆறாவது பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஓசூர், டேஹ்ராடூன், மற்றும் கோவாவில் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிறுவனமானது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கிய நிறுவனமாகும். இங்கு தயாரிக்கப்படும் வாட்ச்கள் 32 நாடுகளுக்கு அனுப்பபடுகிறது. சோனாடா, பாஸ்ட்டிராக் போன்ற தயாரிப்புகளும் டைட்டன் நிறுவனத்தினுடையது தான்.

அனைத்து தரப்பினரையும் கவரும் கைக்கடிகாரம்:

அனைத்து தரப்பினரையும் கவரும் கைக்கடிகாரம்:

டைட்டன் நிறுவனமானது அனைத்து தரப்பினரும் அணியக்கூடிய விலையில் கடிகாரங்களை விற்பனை செய்து வருகிறது. கடிகாரம் என்றாலே உடனடியாக நியாபகத்திற்கு வருவது டைட்டன் வாட்ச் தான். இந்த கடிகாரத்திற்கு என்று தனி ரசிகர்களே உள்ளனர். அதேபோல் டைட்டன் நிறுவனம் மாற்றி யோசிப்பதில் புது வகைகளை புகுத்துவதில் ஆழந்து யோசித்து துரிதமாக செயல்படும். அந்த வகையில் நம்ம தமிழ்நாடு வாட்ச் என்ற தலைப்பில் டைட்டன் நிறுவனம் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நம்ம தமிழ்நாடு வாட்ச்

நம்ம தமிழ்நாடு வாட்ச்

நம்ம தமிழ்நாடு வாட்ச் என்ற தலைப்பில் கைக்கடிகாரத்தில் உள்புறத்தில் தமிழ்நாட்டு கோவில் தூண்கள், யாழி, கோபுரங்களை பொறித்துள்ளது. இந்த கைக்கடிகாரமானது தமிழக கோவில்கள் மற்றும் தமிழர்களின் கட்டடக் கலையை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வாட்ச்

காஞ்சிபுரம் வாட்ச்

காஞ்சிபுரம் பட்டு என்றால் தனி சிறப்புதான். இங்கு தயாரிக்கப்படும் பட்டுகள் உலகில் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை கவுரவிக்கும் விதமாக காஞ்சிபுரம் வாட்ச் என்ற தலைப்பில் பெண்களுக்கான கைக்கடிகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் அடையாளத்தை கடிகாரத்தில் உள்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பட்டே முன் உதாரணம்

காஞ்சிபுரம் பட்டே முன் உதாரணம்

மேலும் இதுகுறித்து டைட்டனின் ஆன்லைன் இணையதளத்தில் தெரிவித்திருப்பதாவது, உலகிலேயே பழமையான மொழி தமிழ் எனவும் கலாச்சாரங்கள் நிறைந்த மொழி எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழர்களின் கட்டிட கலைகள் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் புகழாரம் சூட்டியுள்ளது. காஞ்சிபுரம் பட்டில் பொறிக்கப்பட்டிருந்த மயில் அடையாளத்தை பார்க்கும் போது இந்த சிந்தனை தோன்றியதாக இதை வடிவமைத்தவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Titan's New Introduction: Tamil alphabet watches

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X