டைட்டனின் அடுத்த அவதாரம், ஏகிரும் எதிர்ப்பார்ப்புகள்..!
கடிகாரத்துறையில் உலகளவில் ஆறாவது பெரிய நிறுவனமான டைட்டன் நிறுவனம் (Titan), எச்பி நிறுவனத்துடன் (HP) இணைந்து தனது அடுத்த அவதாரத்தை எடுக்க உள்ளது. அதாவது, ஸ்மார்ட்வாட்ச் தளத்தில் களமிறங்க உள்ளது.
மேலும், டைட்டனின் ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த ப்ளூ-பிரிண்ட் மற்றும் புகைப்படங்கள் பற்றிய தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

முதல் ஸ்மார்ட் வாட்ச் :
நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆனது இந்த ஜனவரி மாதத்திலேயே அறிமுகமாக உள்ளது.

எச்பி :
மேலும், டைட்டன் நிறுவனம் ஆனது எச்பி நிறுவனத்துடன் இணைந்து தான் தனது முதல் ஸ்மார்ட் கடிக்காரத்தை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ-பிரிண்ட் :
மேலும் டைட்டனின் இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் ப்ளூ-பிரிண்ட் (Blue Print) ஒன்றும் வெளியாகியுள்ளது.
இன்டர்நெட் :
ப்ளூ-பிரிண்ட்டில் காணப்படும் வடிவத்திலேயே, டைட்டனின் ஸ்மார்ட் வாட்ச் புகைப்படம் ஒன்று ட்விட்டர் மற்றும் இன்டர்நெட்டில் பரவி வருகிறது.

அம்சங்கள் :
பிரீமியம் பிரஷ்டு உலோகம், கீறல் எதிர்ப்பு கண்ணாடி, மற்றும் ஒரு நெகிழ்வான தோல் போன்ற பட்டா போன்ற டைடனுக்கே உரிய பாணியில் பல வகையான ஸ்மார்ட் அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட் வாட்ச் வெளியாக இருக்கிறது.

வன்பொருள் விவரங்கள் :
மேலும் டைட்டன் ஸ்மார்ட் வாட்ச் சார்ந்த வன்பொருள் விவரங்கள் (Hardware details) எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications