பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்! கைது!
இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காரணத்திற்காகத் திருப்பூரைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் அஜித். இவர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளராக இருந்து வந்தார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித் சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். ஜாமினில் வெளிவந்து இவரின் அட்ராசிட்டி குறையவில்லை, மீண்டும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளம் பெண்ணின் செல்போனுக்கு பலான படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி இருக்கிறார். அத்துடனாவது இவரின் சேட்டையை நிறுத்தியிருக்கலாம். அஜித் அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

அடுத்த சேட்டையாக, அப்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படத்தை தன்னோடு இணைத்து மார்பிங் செய்து, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். கடுப்பான பெண்மணி வீட்டில் தெரிவித்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதை தட்டிக்கேட்க, அஜித் அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் அஜித்தை போலீசார் கைது செய்து விசாரித்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அஜித்தின் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து தற்பொழுது அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications