Home
News

ரூ.576 கொடுங்க போதும்.. வீடுகளில் PNG மீட்டர் பொருத்திய கேஸ் கனெக்ஷன்.. இனி LPG கேஸ் சிலிண்டரை தூக்கி போடுங்க!

தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தமாக சுமார் 30,000 குடும்பங்களுக்கும் மேலான மக்கள், குழாய் மூலம் எரிவாயு இணைப்புக்காக (Pipeline gas connection - PNG) பல்வேறு எரிவாயு விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு (Pipeline gas connections to home) வழங்க இன்னும் அதிகப்படியான மக்களை ஊக்குவிக்கும் வகையில், எரிவாயு நிறுவனங்கள் இப்போது பல கட்டண சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு (LPG Gas Cylinder) பதிலாக இனி பைப்லைன் மூலம் கேஸ் இணைப்பு வழங்கப்படும்.

இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் இப்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மற்றும் விறகடுப்புகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சில பேச்சிலர்கள் (Bachelors) மற்றும் வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் (Students) இண்டக்ஷன் ஸ்டவ் (Induction stove) என்ற மின்சார அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான பைப்லைன் கேஸ் இணைப்பை (PNG) மக்கள் பெறுவார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ரூ.576 கொடுங்க போதும்.. வீடுகளில் மீட்டர் பொருத்திய கேஸ் கனெக்ஷன்..

LPG கேஸ் சிலிண்டரை தூக்கி போடுங்க.. இனி வீடுகளுக்கு நேரடியாக வருகிறது PNG கனெக்ஷன்:

இனி வரும் காலத்தில் சென்னை (Chennai) மற்றும் திருவள்ளுர் (Tiruvallur) சுற்றி உள்ள பகுதிகளில் வேகமான PNG இணைப்பு வழக்கும் வேலைகள் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இனி மக்கள் எல்பிஜி கேஸ்ளுக்கு (LPG Gas Cylinder) பதிலாக இனி நேரடியாக மீட்டர் பொருத்தப்பட்ட குழாய்கள் மூலம் (Pipeline gas meters) தடையில்லா எரிவாயு சேவையை தமிழக மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

குஜராத், கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் குழாய்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்படுகிறது. இந்த முறை எல்பிஜியுடன் ஒப்பிடும்போது சுமார் 20% மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது என்று கூறப்படுகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள எல்என்ஜி முனையம் இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, வாகனங்களுக்கு CNG ஆக ஒரு பங்கு வழங்கப்படுகிறது.

மறுபுறம், இது வீட்டு உபயோகத்திற்காக PNG ஆகவும் மாற்றப்பட்டு குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த நான்கு ஆண்டுகளில், சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள சுமார் 33 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு PNG இணைப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மணலியிலிருந்து ஜவஹர்லால் சாலை வழியாக, மாதவரம் வட்டம், கத்திப்பாராவை அடைந்து, மீனம்பாக்கம் வரை செல்லும் பிரதான குழாய் அமைக்கப்படவுள்ளது.

வெறும் ரூ. 576 பதிவு கட்டணத்துடன் சென்னை வீடுகளில் மீட்டர் பொருத்திய கேஸ் கனெக்ஷன்:

இந்த மெயின் குழாய்கள் இணைப்புகளில் இருந்து, குடியிருப்பு பகுதிகளில் கிளை வழிகள் அமைக்கப்படும். PNG இணைப்புகள் LPG ரெட்டிகுலேட்டட் இணைப்புகளைப் போலவே செயல்படும். வீடுகளில் உள்ள ரெகுலேட்டர் மூலம் எரிவாயு அணுகக்கூடியது. மின்சார ரீடிங் மீட்டர் போன்ற சாதனம் கேஸ் பயன்பாட்டை கணக்கிட பொருத்தப்படும். பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் பயனரிடம் இருந்து வசூலிக்கப்படும். பைப்லைன் கேஸ் இணைப்பிற்கான முன்பதிவை மேற்கொள்ள பொதுமக்கள் வெறும் ரூ.576 கட்டணம் செலுத்தினால் போதும்.

ஆரம்ப முன்பதிவு கட்டணத்தை (Starting Register Fees) வசூலித்த 90 நாட்களுக்குள் PNG இணைப்புகளை உரிய கேஸ் இணைப்பு நிறுவனங்கள் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, ​​கேளம்பாக்கம், பெரும்பாக்கத்தில் உள்ள டிசி யூனிட்கள் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள எல்சிஎன்ஜி நிலையம் மூலம் எரிவாயு வழங்கப்படுகிறது. குழாய் முன்னேற்றங்கள் தொடர்வதால், விரைவான மற்றும் எளிதான எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்த துணை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tired Of Using LPG Gas Cylinders Register Now For Pipeline Gas Connections PNG In Chennai At Just Rs 576 Register Fees
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X