Home
News

இந்த சம்மரில் உங்க Mobile சூட்டை கவனிப்பது எவ்வளவு முக்கியமானது? சூடாகாமல் இருக்க என்ன செய்யணும்?

கோடை காலத்தில் உங்களை எப்படி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்கிறீர்களோ.. அதேபோல, உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் மொபைல் (Mobile) போனை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த சம்மரில் உங்கள் போனை அதிக சூடாகாமல் பார்த்துக்கொள்ளவது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

மொபைல் போன்கள் நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டன. இவை இரு நபர்களுக்கு இடையிலான தகவல்தொடர்பு சேவைக்கு மட்டுமின்றி, இப்போது பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. மொபைல்களின் தேவையும் இப்போது முன்பை விட அதிகரித்துவிட்டது. சில சமயங்களில், போன்கால் ஏற்படக்கூடும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை உணராமல் அவற்றை நாம் அசால்ட்டாக பயன்படுத்தி வருகிறோம்.

இந்த சம்மரில் உங்க Mobile சூட்டை கவனிப்பது எவ்வளவு முக்கியமானது?

அடிக்கிற வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பல விஷயங்களை நாம் செய்துகொள்கிறோம். அதேபோல், அதிக வெப்பத்தினால் எலெக்ட்ரோனிக்ஸ் சாதனங்களின் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள். அதிலும் குறிப்பாக உங்கள் கைகளில் நாள் முழுக்க புரளும் ஸ்மார்ட்போனின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஓவர் ஹீட்டிங் கோளாறு இந்த கோடை காலத்தில் ஏற்பட்டால் எவ்வளவு ஆபத்தாக முடியுமென்றும் யோசித்து பாருங்கள்.

ஓவர் ஹீட்டிங் சிக்கல் பயனருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு போனின் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறனையும் சேதப்படுத்தும். உங்கள் ஃபோன் பல காரணங்களுக்காக அதிக வெப்பமடையும். நேரடி சூரிய ஒளியில் போனை விடுவது மிகவும் இயல்பான விஷயம் தான் என்றாலும், கோடை காலத்தில் முடிந்த வரை உங்கள் மொபைலை வெயிலில் இருந்து விலக்கி வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

உங்கள் ஃபோனின் பிரைட்னஸை நீங்கள் அதிகரிக்காமல் இருப்பது நல்லது. இது உங்கள் பேட்டரியை அதிகமாக பயன்படுத்தும் என்பதை தாண்டி, இது அதிக வெப்பத்தை உருவாக்கி, உங்கள் சாதனத்தை அதிக வெப்பமடைய செய்கிறது. இது வெயில் காலத்தில் தொடர்ந்தால், உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகி ஏதேனும் ஒரு நேரத்தில் செயலிழக்க வாய்ப்புள்ளது. உங்கள் டிஸ்பிளே பிரைட்னஸை குறைத்து பயன்படுத்துவது சிறப்பானது.

இந்த சம்மரில் உங்க Mobile சூட்டை கவனிப்பது எவ்வளவு முக்கியமானது?

பின்னணியில் இயங்கும் அதிகமான ஆப்ஸ் திறந்திருக்கும் போது உங்கள் ஃபோன் விரைவில் சூடாகிறது. இந்தப் பயன்பாடுகள் உங்கள் மொபைலின் பேட்டரியை வேகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதே நேரத்தில் உங்கள் போனை விரைவில் சூடாக்குகிறது. நீங்கள் இனி பயன்படுத்தாத அல்லது பின்னணியில் இயங்கும் ஆப்ஸ்களை நிறுத்தம் செய்வது முக்கியமானது. இதன் மூலம் உங்கள் போனின் பணிச்சுமையை வெகுவாகக் குறைத்து, அது அதிக வெப்பமடைவதைத் தடுக்கலாம்.

நீங்கள் பயன்படுத்தும் சார்ஜர் உங்கள் மொபைலுடன் இணக்கமானதா அல்லது ஒரு நம்பகமான புகழ்பெற்ற உற்பத்தியாளரிடமிருந்து வந்ததா என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் மொபைலின் சார்ஜிங் போர்ட் மற்றும் சார்ஜர் ஆகியவை சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்யவும். ஏனெனில், இத்தகைய விஷயங்கள் உங்கள் போனை அதிக வெப்பமடைய செய்து, உங்களுக்கு சிக்கலை உருவாக்கும்.

உங்கள் ஃபோனுக்கான கூலிங் பேன் சாதனத்தை வாங்குவது மிகவும் சிறந்தது. இந்த கோடை காலத்தில், நீங்கள் அதிகமாக உங்கள் போனை கேமிங்கிற்காகப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட பணிகளைச் செய்கிறீர்கள் என்றால், கட்டாயமான ஒரு மொபைல் கூலிங் பேனை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வது சிறப்பானது. வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஃபோன்களுக்கு பலவிதமான கூலிங் ஃபேன்கள் கிடைக்கின்றன.

அதிக வெப்பம் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஒரு வெறுப்பூட்டும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பிரச்சனையாக இருக்கலாம். இருப்பினும், இந்த எளிய விஷயங்களை நீங்கள் கவனித்தால், உங்கள் ஃபோன் அதிக வெப்பமடைவதைத் தடுக்க முடியும். ஓவர் ஹீட்டிங் சிக்கலை கோடை காலம் மட்டுமின்றி எல்லா நேரத்திலும், சரியாக கவனித்து வந்தால், உங்கள் போன் பல ஆண்டுகளுக்கு சீராகச் செயல்படுவதை உறுதிப்படுத்த முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tips to keep your smartphone and mobile cool without getting overheating issues in this summer 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X