Home
News

உஷார்: பொது இடங்களில் சார்ஜ் செய்யும்முன் இதை செய்வது அவசியம்- கண்ணிமைக்கும் நேரம்தான்!

பொதுவாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நாம் அனைத்து பொருட்களையும் மறக்காமல் எடுத்து செல்கிறோமா என கவனிப்பது வழக்கம். அதில் முதன்மையானது நமது செல்போன். பெரும்பாலான நேரங்களில் முன்னெச்சரிக்கையோடு செல்போனை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்து விடுவோம். தவிர்க்கமுடியாமல் திடீர் பயணம் மேற்கொள்ளும்போது செல்போன் சார்ஜ் கவனிக்க வாய்ப்பு கிடைக்காது.

சார்ஜ் பாயிண்ட்

சார்ஜ் பாயிண்ட்

அந்த சமயங்களில் பயணத்தின்போது கண்ணில் தெரியும் சார்ஜ் பாயிண்ட்டில் எல்லாம் சார்ஜ் செய்ய நேரிடும். அதில் இருக்கும் ஆபத்துகளை நாம் கவனிப்பது இல்லை. பொது சார்ஜிங் இடங்களை ஹேக்கர்கள் கண்காணிக்க வாய்ப்புள்ளது.

பொது இடங்களில் சார்ஜ் நிலையங்கள்

பொது இடங்களில் சார்ஜ் நிலையங்கள்

இதன்மூலம் தங்களது மொபைல் தரவுகள் கசியவிடுவதற்கு வாய்ப்புள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் சார்ஜ் நிலையங்கள் எனப்படும் சார்ஜிங் பாயிண்ட் இருப்பது வழக்கம். பொதுவாக மொபைல் தரவுகள் பல்வேறு மால்வேர் செயலிகள் மூலம் திருடுவது என்பதை நாம் அடிக்கடி கேள்விபட்டிருப்போம்.

தரவுகள் ஹேக்கர்கள் திருட வாய்ப்பு

தரவுகள் ஹேக்கர்கள் திருட வாய்ப்பு

மொபைல் தரவுகளை யூஎஸ்பி கனெக்ட் செய்து கணினியிலோ அல்லது பென்டிரைவ் போன்ற சாதனங்களில் சேமித்து வைப்பது வழக்கம். யூஎஸ்பி கணினியில் கனெக்ட் செய்யும்போது சார்ஜாவது வழக்கம். சார்ஜிங் நிலையங்களில் யூஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யும்போது மொபைல்போனில் இருக்கும் வங்கி பயன்பாடு, பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், ஜிமெயில் உள்ளிட்ட யூபிஐ பயன்பாட்டின் கடவுச்சொல் மற்றும் தகவல்களை ஹேக்கர்களுக்கு அனுப்ப நேரிடும்.

யூஎஸ்பி மூலம் சார்ஜ்

யூஎஸ்பி மூலம் சார்ஜ்

சார்ஜிங் பாயிண்ட்கள் ஹேக்கர்களால் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகமான மக்கள் தங்கள் மொபைல்போனை சார்ஜ் செய்யும் இடங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது. யூஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யும்போது தங்கள் தரவுகள் அனைத்தும் நகல்(Copy) எடுக்கப்படுகிறது. அதன்பின் வங்கிக் கணக்கில் கொள்ளை சம்பவம் அரங்கேற வாய்ப்பிருக்கிறது.

வைரஸ்களை நிறுவ வாயப்பு

வைரஸ்களை நிறுவ வாயப்பு

அதுமட்டுமின்றி யூஎஸ்பி உதவியுடன் ஹேக்கர்கள் தங்கள் மொபைல்போனில் வைரஸ்களை நிறுவ வாயப்பிருக்கிறது. இது மொபைலை சார்ஜ் செய்வதோடு அனைத்து தரவுகளும் நகல் (Copy) எடுக்க ஹேக்கர்களுக்கு உதவுகிறது.

பிரதானமாக ஸ்மார்ட்போன் தேவை

பிரதானமாக ஸ்மார்ட்போன் தேவை

இந்த காலக்கட்டதில் ஸ்மார்ட்போன் தேவை பிரதானமாக இருக்கிறது. அதேசமயத்தில் நமது தனித்தகவல், வங்கிக் கணக்கு முதல் பல்வேறு பிரைவேட் விஷயங்கள் ஸ்மார்ட்போனில் இருப்பதால் அதை கவனமாக கையாள வேண்டும். ஸ்மார்ட்போனுடன் குறைந்த விலையில் பட்ஜெட்டிற்கேற்ப ஒரு பவர் பேங்க் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

சார்ஜிங் பாயின்ட் இன்செர்ட்

சார்ஜிங் பாயின்ட் இன்செர்ட்

அதையும் மீறி அவசரத்தேவைக்கேற்ப மொபைல் போனை சார்ஜ் செய்ய நேர்ந்தால் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகு சார்ஜிங் பாயின்ட் இன்செர்ட் செய்ய வேண்டும். சார்ஜிங் முடிந்த பிறகு ஆன் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Tips to Follow Before Charging Mobile Phone at Public Place: Charging Points may Monitored by Hackers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X