டைம் டிராவல் : 2050க்கு போகலாமா.??

By Meganathan
|

டைம் டிராவல் உண்மையில் இருக்கலாம், இல்லாமலும் போகலாம், இப்ப அது முக்கியமில்லை ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடியும். அவ்வாறு 2050 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறான மாற்றங்கள் நிகழும் என்ற கணிப்புகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றது.

இங்கு 2050 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட இருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள், மற்றும் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சில சாத்திய கூறுகளையும் துல்லியமான சதவிகித அடிப்படையில் தொகுத்திருக்கின்றோம்.

ட்ரீம்

ட்ரீம்

ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தற்சமயம் சாத்தியமாகி விட்டது. எதிர்காலத்தில் அதாவது 2050ஆம் ஆண்டு கனவுகளை பதிவிறக்கம் செய்ய முடியும் என நம்பப்படுகின்றது.
இதற்கான சாத்திய கூறுகள் : 5%

திருமனம்

திருமனம்

தற்போதே உலகின் சில நாடுகளில் மனிதர்கள் மற்றும் ரோபோட்களிடையே நட்பு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் ரோபோட்களுடன் திருமனம் நடைபெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதற்கான சாத்திய கூறுகள் : 10%

விண்வெளி

விண்வெளி

தற்சமயம் உலகெங்கும் விண்வெளிக்கு சுற்றுலா செல்வது குறித்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது என்ற நிலையில் 2050களில் நிலவில் 3டி ப்ரின்டிங் முறையில் தங்கும் விடுதிகள் திறக்கப்படலாம்.
இதற்கான சாத்திய கூறுகள் : 25%

குழந்தை

குழந்தை

விண்வெளியில் கர்பமாவது ஒரு வகையில் சாத்தியம் என நினைத்தாலும் அங்கேயே குழந்தை பெற்று கொள்வது சாத்தியமாகுமா என்ன? 2050 ஆம் ஆண்டில் விண்வெளியிலேயே குழந்தை பெற்று கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.
இதற்கான சாத்திய கூறுகள் : 10%

வாழ்நாள்

வாழ்நாள்

200 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களின் வாழ்நாள் 40-45 ஆண்டுகள் வரை இருந்தது, ஆனால் இன்று 75-80 ஆண்டுகளாக உயர்ந்திருக்கின்றது. அப்படியானால் 2050களில் 150 ஆண்டுகள் மனிதர்கள் உயிர்வாழ முடியும் என நம்பப்படுகின்றது.
இதற்கான சாத்திய கூறுகள் : 40%

பூச்சி

பூச்சி

வளர்ந்து வரும் நவீன யுகத்தில் ஏற்கனவே பல்வேறு பூச்சு வகைகள் அழிந்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுகளில் ரோபோ பூச்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதோடு உளவு கேமரா கொண்டு ரோபோ பூச்சு வகைகளும் இருக்கலாம்.
இதற்கான சாத்திய கூறுகள் : 40%

க்ளோன்

க்ளோன்

விளங்குகளை க்ளோன் செய்யும் வழக்கம் 1996 ஆம் ஆண்டே துவங்கி விட்ட நிலையில், எதிர்காலத்தில் மனிதர்களை க்ளோன் செய்யவும் யாரேனும் முயற்சி செய்வர்.
இதற்கான சாத்திய கூறுகள் : 60%

தோல்

தோல்

எதிர்காலத்தில் 3டி ப்ரின்ட் அல்லது ஸ்ப்ரே மூலம் தோல் உருவாக்கப்படலாம்.
இதற்கான சாத்திய கூறுகள் : 70%

பச்சை

பச்சை

முற்றிலும் மின்னணு முறையில் செயல்படும் எல்இடி பச்சை குத்தி கொள்வது அல்லது அனிமேஷன் வகை பச்சை குத்தி கொள்ளும் வழக்கம் சாத்தியமாகலாம்.
இதற்கான சாத்திய கூறுகள் : 80%

காண்டாக்ட் லென்ஸ்

காண்டாக்ட் லென்ஸ்

இன்றைய கூகுள் கிளாஸ் வகைகள் எதிர்காலத்தில் காண்டாக்ட் லென்ஸ் வடிவில் வெளியாகலாம்.
இதற்கான சாத்திய கூறுகள் : 90%

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Time Travel to 2050, check out the tech possibilities Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X