Home
News

Google Search-க்கு திரும்பி வந்த சின்னப்புள்ள தனமான அம்சம்! ட்ரை செஞ்சி பாருங்க!

"ஸ்கூல் பசங்க கூட இதை ட்ரை பண்ணி பார்க்க விரும்ப மாட்டாங்க! இதெல்லாம் ஒரு அப்டேட்-ஆ?" என்று கூறி சிலர் கடுப்பாகலாம்.

ஆனால் உண்மை என்னவென்றால், எல்லோருக்குமே எல்லாமே பிடித்து விடாது அல்லவா? ஒவ்வொருவரின் ரசனையும், தேவையும் வேறுபடும் அல்லவா?

ஆகையால் சிலருக்கு இந்த அப்டேட் பிடிக்கலாம்; சுவாரசியமாக இருக்கலாம்!

ஆகையால் சிலருக்கு இந்த அப்டேட் பிடிக்கலாம்; சுவாரசியமாக இருக்கலாம்!

கூகுளுக்கு அப்படி என்ன அப்டேட் வந்துள்ளது? அதனால் என்ன பயன்? அது எப்படி வேலை செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

கடந்த மாத இறுதியில் வேலை செய்வதை நிறுத்திய ஒரு அம்சத்தை, மீண்டும் கொண்டு வர கூகுள் முடிவு செய்துள்ளது. அது Google Search-இல் அணுக கிடைக்கும் "நேரம் தொடர்பான" ஒரு அம்சம் ஆகும்.

அதாங்க.. Timer மற்றும் Stop Watch- மீண்டும் வந்தது!

அதாங்க.. Timer மற்றும் Stop Watch- மீண்டும் வந்தது!

அறியாதோர்ருக்கு, கூகுள் சேர்ச்சின் டெஸ்க்டாப் அல்லது மொபைல் வெப் வெர்ஷனைகளில் அணுக டைமர் அம்சம் ஆனது கிட்டத்தட்ட ஒரு அலாரம் போன்றது.

எடுத்துக்காட்டிற்கு நீங்கள் 10 நிமிடங்களுக்கான டைமர்-ஐ செட் செய்தால்.. சரியாக 10 நிமிடங்கள் கழித்து அந்த டைமர் உங்களை அலெர்ட் செய்யும்! இதே போல தான் 'ஸ்டாப் வாட்ச்' அம்சமும் ஆனால் அதை கைமுறையாக ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்ய வேண்டும்.

ட்ரை செய்ய விரும்புவார்கள்..

ட்ரை செய்ய விரும்புவார்கள்.. "இதை" டைப் செய்யவும்!

கூகுள் சேர்ச்சிற்கு மீண்டும் வந்துள்ள டைமர் மற்றும் ஸ்டாப் வாட்ச் அம்சத்தை நீங்கள் முயற்சிக்க விரும்பினால், டெஸ்க்டாப் அல்லது மொபைல் வெப் வெர்ஷனில் உள்ள Google Search-க்கு சென்று "set timer for 10 minutes" அல்லது "start stopwatch" என்று டைப் செய்து தேடவும்.

அவ்வளவு தான்!

அவ்வளவு தான்!

உடனே டைமர் மற்றும் ஸ்டாப் வாட்ச் உடன் கூடிய விட்ஜெட்டை நீங்கள் காண்பீர்கள். நினைவூட்டும் வண்ணம், டைமர் ஆனது நீங்கள் செட் செய்யும் (டைப் செய்யும்) நிமிடங்களுக்கு ஏற்றபடி தானாகவே தொடங்கப்படும்; தானாகவே நிறுத்தப்படும்.

ஆனால் Stop Watch - அப்படி இல்லை!

ஆனால் Stop Watch - அப்படி இல்லை!

ஸ்டாப் வாட்ச்-ஐ பொறுத்தவரை, இதை நீங்கள் முழுக்க முழுக்க கைமுறையாக ஸ்டார்ட் செய்ய வேண்டும் மற்றும் ஸ்டாப் செய்ய வேண்டும்.

டைமர் மற்றும் ஸ்டாப் வாட்ச் ஆகிய இரண்டிலுமே ரீசெட் ஆப்ஷனும் அணுக கிடைக்கிறது. இந்த பட்டனை பயன்படுத்தி நீங்கள் எல்லாவற்றையும் மறுபடியும் முதலில் இருந்து தொடங்கலாம்!

இது ஏன் நிறுத்தப்பட்டது? இப்போது ஏன் மீண்டும் வந்துள்ளது?

இது ஏன் நிறுத்தப்பட்டது? இப்போது ஏன் மீண்டும் வந்துள்ளது?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த டைமர் அம்சம் கடந்த ஜூலையில் வேலை செய்வதை நிறுத்தியது. ஏனெனில் Google Search-இல் Timer என்று டைப் செய்து தேடும் போது, சில "பொருத்தமில்லாத" தேடல் முடிவுகள் காட்டப்பட்டன.

தற்போது அந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்டு, குறிப்பிட்ட அம்சம் மீண்டும் கூகுள் சேர்ச்சிற்கு வந்துள்ளது. கூகுள் நிறுவனமும் இந்த அம்சத்தின் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

10 நிமிடங்கள்.. 15 நிமிடங்கள் என்று செட் செய்யவில்லை என்றால்?

10 நிமிடங்கள்.. 15 நிமிடங்கள் என்று செட் செய்யவில்லை என்றால்?

மேலே குறிப்பிட்டபடி, இந்த கூகுள் சேர்ச் அம்சத்தை மிகவும் எளிமையாக பயன்படுத்தலாம். இது "மீண்டும்" வந்துள்ளதே தவிர இதில் எந்த மாற்றமும் செய்யப்படவிலை, இது முன்பு இருந்ததை போலவே செயல்படுகிறது.

ஒருவேளை நீங்கள் எந்த விதமான நேரத்தையும் குறிப்பிடாமல் வெறுமனே Timer என்று மட்டும் தேடினால், உங்களுக்கு 5 நிமிடங்களில் இருந்து தொடங்கும் டைமர் செட் செய்யப்படும்

டைப் செய்தால் மட்டும் அல்ல.. சொன்னாலும் கூட போதும்!

டைப் செய்தால் மட்டும் அல்ல.. சொன்னாலும் கூட போதும்!

கூகுள் சேர்ச்சிற்கு திரும்பி வந்துள்ள டைமர் மற்றும் ஸ்டாப் வாட்ச் அம்சத்தை பயன்படுத்த நீங்கள் ஒவ்வொரு முறையும், கூகுளுக்கு என்று டைப் செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

உங்கள் ஸ்மார்ட்போன்களின் வழியாக வாய்ஸ் கமாண்ட்-களையும் நிகழ்த்தலாம். அதாவது கூகுள் அசிஸ்டன்ட் வழியாகவும் கூட நீங்கள் டைமர் மற்றும் ஸ்டாப் வாட்ச் விட்ஜெட்டை அணுகலாம்!

Best Mobiles in India

English summary
Timer and Stop Watch Feature Back to Google Search How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X