Home
News

டாப் 5 லிஸ்ட் இதுதான்! ரூ.10,000க்கு இவ்வளவு 5G மொபைல் போன்கள் இருக்கா?

இப்போது வரும் அப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் சிறந்த மேம்பட்ட 4ஜி போன் வைத்திருந்தாலும் தற்போது 5ஜி போனுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் கையில் இருக்கும் 4ஜி போன் தான் நன்றாக இருக்கிறதே, எதற்கு 5ஜி போனில் செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி வந்தால் 5ஜி சேவை பயன்படுத்துவதற்கு 5ஜி போன் என்பது கட்டாயம் தானே. இருப்பினும் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வகையிலான மலிவு விலை 5ஜி போன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரூ.10,000 விலைப் பிரிவு 5ஜி போன்கள்

ரூ.10,000 விலைப் பிரிவு 5ஜி போன்கள்

ஆரம்பத்தில் உச்ச விலை போன்களில் மட்டுமே 5ஜி ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது மலிவு விலையில் அறிமுகமாகும் போன்களில் கூட 5ஜி அம்சம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மலிவு விலை 5ஜி போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சொல்லப்போனால் ரூ.10,000 விலைப் பிரிவில் கூட 5ஜி போன்கள் கிடைக்கத் தொடங்கி விட்டது. அந்த பட்டியலை தான் தற்போது பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் போக்கோ, சியோமி மற்றும் சாம்சங் போன்கள் இடம்பெற்றிருக்கிறது.

POCO M4 5G

POCO M4 5G

POCO M4 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதாவது போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.11,000 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 14 வரையிலான அப்டேட்

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 13 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 14 வரையிலான அப்டேட் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Motorola Moto G51 5G

Motorola Moto G51 5G

Motorola Moto G51 5G ஸ்மார்ட்போனின் விலை ஆனது ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த Motorola Moto G51 5G ஸ்மார்ட்போனில் நீடித்த பேட்டரி ஆயுளை பெறலாம். அதற்கேற்ப இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

POCO M4 Pro 5G

POCO M4 Pro 5G

POCO M4 Pro 5G ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் பெரிய டிஸ்ப்ளே, 50 எம்பி பிரதான கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவு இதில் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

Xiaomi Redmi Note 11T 5G

Xiaomi Redmi Note 11T 5G

Xiaomi Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனானது ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 50 எம்பி பிரதான கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனானது ரூ.12,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி சிிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Time to Switch on 5G: Top 5 5G Smartphone Which is Available on Budget Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X