Home
News

Jio-வை விட ரூ.1200 கம்மி.. புது BSNL சிம் கார்டு வாங்க தூண்டும் 365 நாள் பிளான்.. டெய்லி 2GB.. என்ன விலை?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது 4ஜி சேவையை நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் அறிமுகப்படுத்தி, அதன் 5ஜி அறிமுகத்திற்கான சரியான அடித்தளத்தை போட்டு வருகிறது. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனமானது ஆயிரக்கணக்கான புதிய மொபைல் டவர்களை நிறுவியுள்ளது; மேலும் தனது சேவை தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. போதாக்குறைக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வின் விளைவாக பிஎஸ்என்எல் சேவையின் கீழ் இணையும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

இதற்கு மிக முக்கியமான காரணம் - நாட்டிலேயே மிகவும் மலிவான சில ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருக்கிறது. குறிப்பாக 365 நாட்கள் செல்லுபடியாகும் 1 ஆண்டு திட்டங்கள். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிடம் பல வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்கள் இருந்தாலும் கூட, அவைகளை பிஎஸ்என்எல் உடன் ஒப்பிடும்போது மிகவும் விலை உயர்ந்தவைகளாக உள்ளன.

புது BSNL சிம் கார்டு வாங்க தூண்டும் 365 நாள் பிளான்!

அப்படியாக ஜியோவை விட ரூ.1200 மலிவான ஒரு திட்டத்தை (பலரையும் ஒரு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை வாங்க தூண்டும் ஒரு திட்டத்தை) பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அதென்ன திட்டம்? இதன் கீழ் டெய்லி எவவ்ளவு டேட்டா கிடைக்கும்? அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் அணுக கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல்-ன் 395 நாள் ரீசார்ஜ் திட்டம்: நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல்-ன் ரூ.2,399 திட்டத்தை பற்றித்தான். சராசரியாக. தினமும் ரூ.6.57 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கும் இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை வழங்குகிறது மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது

டேட்டா நன்மையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல்-ன் ரூ.2,399 திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி ஹைஸ்பீட் டேட்டா கிடைக்கும். டெய்லி டேட்டா வரம்பை தாண்டிய பிறகு, அதாவது 2ஜிபி டேட்டாவை தீர்த்த பின்னர், இந்த திட்டத்தின் பயனர்கள் தொடர்ந்து 40 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடின் கீழ் இண்டர்நெட்டை அணுகலாம்.

சுவாரசியமாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் கீழ் சில கூடுதல் நன்மைகளும் அணுக கிடைக்கிறது. பிஎஸ்என்எல்-ன் ரூ.2,399 திட்டத்தின் கீழ் ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), ஜிங் மியூசிக் (Zing Music), வாவ் என்டர்டெயின்மென்ட் (Wow Entertainment) மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான (BSNL Tunes.) சந்தாக்கள் போன்ற வேல்யூ ஆடட் சேவைகளும் (value-added services - VAS) அணுக கிடைக்கிறது.

ஜியோவிடம் உள்ள 365 நாள் ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டத்தின் விலை ரூ.3,599 ஆகும். அதாவது இது பிஎஸ்என்எல்-ஐ விட ரூ.1200 மலிவானதாக உள்ளது. ஆனால் இது டெய்லி 2.5 ஜிபி அதிவேக டேட்டாவை மட்டுமின்றி "முற்றிலும் இலவசமாக" அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது இது தவிர, டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது; மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் இலவச நேஷனல் ரோமிங்கையும் வழங்குகிறது.

ஒப்பிடுகையில் ஜியோவின் ரூ.3599 திட்டமானது பிஎஸ்என்எல்-ஐ விட மிகவும் விலை அதிகமானதாக இருந்தாலும் கூட, பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவைகளை நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் இன்னும் அறிமுகம் செய்யவில்லை மற்றும் 5ஜி அறிமுகம் குறித்த வேலைகள் "தீவீரமாக" நடக்கிறதே தவிர. அது எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவலும் இல்லை. ஆக ஜியோவின் சேவை தரம் பிஎஸ்என்எல்-ஐ விட மிகவும் சிறப்பாக உள்ளது என்பதில் சந்தகமே வேண்டாம். ஆனாலும் கூட நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால்..புதிதாக ஒரு பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை வாங்குவது நல்லது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Time to Buy New BSNL SIM This 365 Day Recharge Challenges Jio Because It is Rs 1200 Cheaper
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X