Home
News

ஒரே டுவிட்., குழப்பத்தில் நெட்டிசன்கள்: எலான் மஸ்க் சொல்ல வருவது என்ன?- இதை செய்யப்போறாரா?

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்

கடந்த நவம்பர் மாதத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்ததையடுத்து அவரது சொத்து மதிப்பு உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். எலான் மஸ்க் பலரின் நாயகனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான தோல்வி

அற்புதமான தோல்வி

எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இந்த திட்டத்தை நோக்கியே ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் முன்னோக்கி நகர்கிறது. இதன் சோதனை தோல்வி அடைந்த போது எலான் மஸ்க், அற்புதமான சோதனை, வாழ்த்துக்கள் ஸ்டார்ஷிப் அணி என குறிப்பிட்டார். தோல்விகளின் மூலம் எப்படி செய்யக்கூடாது என்ற தரவுகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளராக இருப்பவர் எலான் மஸ்க், இவர் பதிவிடப்படும் குறிப்பிட்ட டுவீட் ஆனது பெரிய அளவு வைரலாவது உண்டு. இவர் பதிவிடப்படும் டுவிட்டின் உள்நோக்கம் மற்றும் கருத்து குறித்து அவரை பின்தொடர்பவர்கள் ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள். மஸ்க் ஒரு செல்வாக்க மனிதர் ஆவார். இவரது டுவிட்டில் பெருமளவு வரவேற்பு பெற்றது கிரிப்டோகரன்சி தான்.

எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட்

அதன்படி அவரது சமீபத்திய டுவிட்டில் Time is the ultimate currency என பதிவிட்டிருந்தார். இந்த டுவிட்டுக்கான பொருளை புரிந்து கொள்ள முடியாமல் நெட்டிசன்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மஸ்க் பதிவிட்ட இந்த டுவிட்டுக்கு 61,000-க்கும் அதிகமான ரீடுவிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3.7 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றிருக்கிறது.

அல்டிமேட் கரன்சிக்கான நேரம்

அல்டிமேட் கரன்சிக்கான நேரம்

அல்டிமேட் கரன்சிக்கான நேரம் என அவர் டுவிட் செய்திருக்கிறார். இவர் முன்னதாகவே டாகிகாயின் குறித்து டுவிட் செய்தார். டாகிகாயின் குறித்து கடைசியாக மஸ்க் டுவிட் செய்தபோது கிரிப்டோகரன்சி சந்தை மதிப்பு 11,000% உயர்ந்தது. தற்போது இவர் கிரிப்டோகரன்ஸி குறித்து மறைமுகமாக ஏதோ குறிப்பிட்டுள்ளது போல் இருக்கிறது. ஆனால் சரியான விவரம் தெரியாமல் புலம்பி தவிக்கின்றனர். CRED-ன் நிறுவனர் குணால் ஷா உட்பட பல தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் "என்ட்ரோபி மட்டுமே உண்மை" என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலீடு செய்யும் மக்கள்

முதலீடு செய்யும் மக்கள்

எலான் மஸ்க்கின் டுவிட்கள் எப்போதும் சந்தையில் முதலீடு செய்யும் மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கு பெரும். முன்னதாக மஸ்க், டெஸ்லாவில் கிரிப்டோகரன்சி ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்த சில மணி நேரங்களில் கிரிப்டோகரன்சி மதிப்பு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் செல்வாக்கு மிக்க மனிதர் என்பதால் அவரது டுவிட் பல நோக்கங்களையும் உண்மைத் தன்மையையும் கொண்டதாகவே பார்க்கின்றனர்.

புதிய நாணயமா?

புதிய நாணயமா?

எலான் மஸ்க் ஒரு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிப்டோகரன்சி முதலீடு என்பது தற்போது பிரதான வளர்ச்சியாக முன்னேறி வருகிறது. கிரிப்டோகரன்சிகளை ஊக்குவிக்கும் பிரதான நபர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகரன்சிகள் ஏற்றுக் கொள்ளப்படும்

கிரிப்டோகரன்சிகள் ஏற்றுக் கொள்ளப்படும்

முன்னதாக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கிரிப்டோகரன்சிகளை தனது நிறுவன கார்களுக்கு கட்டண வடிவமாக ஏற்றுக் கொள்ள தொடங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பிட்காயின் பிட்காயின் மதிப்பு அதிகரிக்கத்தது. இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
"Time is the Ultimate Currency"- Netizens Confussed about Elon Musk Tweet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X