Home
News

வெறும் ஐந்து நிமிடத்தில் டிம் கூக்கை கவர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.!

அந்த பேட்டி முழுவதும், கூக் எங்கும் தனது கட்டுப்பாட்டை இழக்காமலும், சிறந்த நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியும், தான் கூறிய கருத்துக்களில் வலுவாக நின்றார்.

By Vivek Sivanandam

புதிதாக பொறுப்பேற்ற சி.ஈ.ஓக்களுக்கு சிறப்பு வகுப்பு என்று ஒன்று இருந்தால், அதை தான் சமீபத்தில் டிம் கூக் நடத்தினார் எனக்கூறலாம். சமீபத்தில் நடைபெற்ற 10வது ஆண்டு டி மாநாட்டில் மிகவும் திறமையாகவும், வேடிக்கையாகவும், அதிக கட்டுக்கோப்பாகவும் நடைபெற்ற பேட்டியில், பேஸ்புக் நிறுவனத்துடனான ஆப்பிளின் உறவு முதல் அனைத்து விதமான கேள்விகளையும் சிறப்பாக கையாண்டார் ஆப்பிள் நிறுவன சி.ஈ.ஓ டிம் கூக்.

வெறும் ஐந்து நிமிடத்தில் டிம் கூக்கை கவர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.!

தற்போது நடைபெறும் காப்புரிமை போருக்கு மத்தியில், தொலைக்காட்சி வர்த்தகத்தில் பொறுமையாக நுழைவது தான் நல்லது என அதில் தெரிவித்தார். அந்த பேட்டியில் செயல்திறனை காட்டியதன் மூலம், டிம் கூக் தனது நண்பரும் வழிகாட்டியுமான ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

அந்த பேட்டி முழுவதும், கூக் எங்கும் தனது கட்டுப்பாட்டை இழக்காமலும், சிறந்த நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியும், தான் கூறிய கருத்துக்களில் வலுவாக நின்றார்.

 ஒரு சுமையாக பார்க்கிறேன்

ஒரு சுமையாக பார்க்கிறேன்

மேலும் இந்த பேட்டியின் மூலம் எப்படி அவர் உண்மையான சிஈ.ஓ வாக நடந்துகொள்கிறார், தனது நிறுவனத்தின் மீது எப்படி பயபக்தியுடன் உள்ளார் மற்றும் ஆப்பிள் நிறுவன நிறுவனரின் நோக்கங்களை எப்படி தொடர்ந்து செயல்படுத்தவுள்ளார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். "ஸ்டீவ் மிகச்சிறந்த அறிவாளி மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். எனது பணியை எப்போது அவருக்கு மாற்றாக நினைத்ததே இல்லை. அவர் உண்மையாவர். அவரை போல வேறொருவரை பார்க்கவே முடியாது. அவரின் இடத்தை நிரப்புவதை ஒரு சுமையாக பார்க்கிறேன்" எனக் கூறினார் டிம்.

உண்மையான விசுவாசி

உண்மையான விசுவாசி

கடந்த 14 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்துடன் இருக்கும் கூக், அதன் உண்மையான விசுவாசி. 1998ல் முதல்முறையாக ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ சந்தித்த போது வெறும் 5 நிமிடத்திலேயே அவருடன் இணைந்து பணியாற்றவேண்டும் என முடிவு செய்துவிட்டதாக விளக்குகிறார் டிம். பணத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது, ஒட்டுமொத்த துறையும் ஒரு திசையில் பயணிக்கும் போது ,அதற்கு நேர்மாறாக நுகர்வோர் வணிகத்தில் ஆர்வம் காட்டியது போன்றவற்றின் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஆல் கவரப்பட்டார் டிம். அதில் மயங்கி அடுத்தநாளே, காம்பேக் நிறுவனப் பணியை உதறிவிட்டு, ஆப்பிளில் இணைந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ கண்டு டிம் வியந்தாலும், அவரின் தனித்திறன்களை நன்கு அறிந்து வைத்திருந்தார் டிம். ஒரு விசயத்தை ஆதரித்து உணர்ச்சிகரமாக ஸ்டீவ் வாதாடுவார், ஆனால் மறுநாளே எப்படி அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்து வாதாடுவார் என்பதை நினைவுகூர்கிறார் டிம். "ஸ்டீவ் எவ்வளவு வேகமாக மாற்றிமாற்றி பேசுவார் என்பதை மறந்து விட்டீர்களா? 180 விதமான நிலைப்பாடு எடுக்கும் நபர் அவர். அதற்கு எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது" என்ற நிருபரின் கேள்விக்கு, "உங்களிடம் ஆதாரம் உள்ளது. ஆனால் அதை நான் தினமும் அருகிலிருந்து பார்த்தேன்" என பதிலடி கொடுத்தார்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்தே தயாரிப்புகளுக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே ஒரே பொறுப்பாளி என பரவலாக நிலவும் கருத்தை மறுத்தார் டிம். தற்போது ஸ்டீவ் இல்லாத போதும் அந்த பொறுப்புகள் இருந்துகொண்டு தான் உள்ளன. ஸ்டீவ் இருந்தாலும், அவர் கூறுவது என்னவென்றால் " அனைத்தையும் ஒருவரால் மட்டுமே செய்ய முடியாது" என்றார்.

டிம் கூக் தனது சி.ஈ.ஒ பதவியை நன்கு தழுவிக்கொண்டார் என்பது தெளிவாக தெரிகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ தனது மூச்சு என அழைக்கும் டிம், புதிய பொறுப்புகள் மற்றும் ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களின் தனித்துவத்தை கண்டு மகிழ்கிறார். ஆப்பிள் வாடிக்கையாளர்கள் ஒரு "மாறுபட்ட இனம்" என விளக்கும் டிம், தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உரிமையுடன் மின்னஞ்சல் அனுப்புவதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Best Mobiles in India

English summary
Tim Cook Steve Jobs Convinced Me to Work for Apple in 5 Minutes : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X