Home
News

ஒவ்வொரு ஆண்டும் புது iPhone வாங்க வேண்டுமா? இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது? டிம் குக் விளக்கம்..

ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய ஐபோன் மாடலை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது மாடலை அறிமுகம் செய்வது அவசியம் தானா என்ற கேள்வி டிம் கூக்கிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?

அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உலக மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் எது என்றால், உடனே எல்லோரும் ஐபோனை (iPhone) தான் சுட்டிக்காட்டுவார்கள். அந்த அளவிற்கு ஐபோன்கள் மிகவும் பிரபலமானவை. இந்த பிரபலமான சாதனத்தை ஆப்பிள் (Apple) நிறுவனம் சிறிய-சிறிய மாற்றங்களுடன், சிறிய மேம்படுத்தல்களுடன் புதிய மாடலாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது மாடலை அறிமுகம் செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புது iPhone வாங்க வேண்டுமா?இதற்கு பின்னால் என்ன காரணம்

உண்மையில், இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் ஐபோன் வரிசையை புதிதாக சிறிய மேம்படுத்தல்களுடன் அறிமுகம் செய்வது அவசியம் தானா என்று ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக்கிடம் (Apple CEO Tim Cook) கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி ஒரு கலந்தாய்வின் போது கேட்கப்பட்டது. இந்த ஆண்டு, ஐபோன் 15 (iPhone 15) செப்டம்பர் 12 அன்று ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 22 அன்று ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்தது. டெல்லி (Delhi) போன்ற இடங்களில் புதிய ஐபோன் 15 மாடலை வாங்க, புதிதாக திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களுக்கு (Apple store) வெளியே மக்கள் வரிசையில் நிற்பதை நம்மால் காண முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் தனது புதிய போனை சந்தையில் அறிமுகப்படுத்தும் போது இத்தகைய நிகழ்வு நடக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் (Tim Cook), நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோனை அறிமுகப்படுத்துவது அவசியமா என்று சமீபத்தில் கேட்கப்பட்டது. அவர் கூறிய பதில் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஐபோன் பிரியர்கள் கடைகளுக்கு வெளியே நின்று, புதிய போன் வரும் வரை காத்திருப்பது உண்மை தான் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் நிறுவனம் ஏன் புதிய போனை வெளியிடுகிறது என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புது iPhone வாங்க வேண்டுமா?இதற்கு பின்னால் என்ன காரணம்

புரூட் (Brut) உடனான ஒரு நேர்காணலில், இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு, "ஒவ்வொரு ஆண்டும் ஐபோன்களை விரும்புபவர்கள் அதை புதிதாக வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதே ஒரு காரணமாக இருக்கிறது, இது ஒரு பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய நிறுவனம் கடமைப்பட்டுள்ளது" என்று டிம் குக் கூறியுள்ளார். பயனர்கள் தங்கள் பழைய ஐபோன்களை மாற்றுகிறார்கள்.

புதியவற்றுக்கு வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் ஆப்பிள் கொள்கை பற்றியும் அவர் பேசினார். இந்த பழைய ஃபோன்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும் அவர் விளக்கினார். பழைய ஐபோன்கள் செயல்பாட்டு நிலையில் இருந்தால் அவற்றை மறுவிற்பனை செய்கிறோம். செயல்படாத போன்களைப் பற்றிப் பேசுகையில், ஆப்பிள் அவற்றைப் பிரித்து புதிய ஐபோனை உருவாக்க அதன் பொருட்களைப் பயன்படுத்துகிறதென்று குக் உண்மையை வெட்டவெளிச்சமாகியுள்ளார். ஆப்பிள் அதன் தயாரிப்பில் உள்ள பொருட்களை ரீசைக்கிளிங் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாசுவை கட்டுப்படுத்த உதவுவதாகவும் நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 பற்றி பேசுகையில், இதன் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 79,900 ஆக இருக்கிறது. அதேபோல், இதன் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 89,900 ஆக இருக்கிறது. இறுதியாக இதன் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 1,09,900 என்ற விற்பனை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tim Cook revealed why Apple launches a new iPhone each year without fail during Brut Interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X