Home
News

எது iPhone கேமரா ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமில்லையா? இவ்வளவு பெரிய உண்மையை Apple மறைத்ததா?

ஆப்பிள் நிறுவனம் தனக்குத் தேவையான பாகங்களை மற்ற தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறது என்ற வதந்தி பல ஆண்டுகளாகவே பரவி வருகிறது. இருப்பினும், சில தீவிரமான ஆப்பிள் ரசிகர்கள், ஆப்பிள் தயாரிப்புகள் எல்லாமே ஆப்பிள் நிறுவனத்தால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்று நம்பி வருகிறார்கள்.

அந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் (Tim Cook) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்துடைய படைப்புகளான ஐபோன், ஐபேட், மாக் புக் ஆகியவை தன்னுடைய தரத்திற்குப் பெயர் போனவை.

தன்னுடைய தயாரிப்புகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை ஆப்பிள் உருவாக்கவில்லை என்றாலும், தங்களது தரத்தைப் பேணி காக்கும் வகையில் முன்னணி நிறுவனங்களிடமிருந்து பாகங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகிறது. இந்த உண்மை சில ஆப்பிள் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.

எது iPhone கேமரா ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமில்லையா?

அந்த வகையில் ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தும் கேமரா சென்சார்கள் சோனி நிறுவனத்தின் தயாரிப்புகள் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்து டிம் குக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பிற்குச் சோனியின் கேமரா சென்சார்களைச் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்திவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தங்களுடன் கூட்டணி வைத்ததற்குச் சோனி நிறுவனத்தின் CEO கெனிச்சிரோ யோஷிடாவிற்கு (Kenichiro Yoshida) நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் சமீபத்தில் சோனி நிறுவனத்தின் குமாமோட்டோ வசதிகளையும் (Kumamoto facility) சுற்றிப் பார்த்துள்ளார். ட்விட்டரில் குக் வெளியிட்ட பதிவில், சோனி நிறுவனத்தின் CEO கெனிச்சிரோ யோஷிடா, அவருடைய புதிய ஸ்மார்ட்போனை காண்பிப்பது போன்ற காட்சி கொண்ட படமும் பகிரப்பட்டுள்ளது.

எது iPhone கேமரா ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமில்லையா?

தங்களுடைய பெயருக்கும் தரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தரும் ஆப்பிள் நிறுவனம் சோனி நிறுவனத்தின் தயாரிப்பான கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதாக வெளிப்படையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் பெரிய விஷயம் என்று இந்தப் பதிவு வெளியானதற்குப் பின்னர்ப் பேசப்படுகிறது. இத்தனை நாள் வரை ஐபோனில் உள்ள கேமராவை ஆப்பிள் நிறுவனமே உருவாக்கி வருகிறது என்று பல ஆப்பிள் ரசிகர்கள் நம்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா சென்சார்கள் மட்டுமின்றி ஐபோனில் பயன்படுத்தப்படும் மற்ற பாகங்களான பேட்டரி, சிப், டிஸ்ப்ளே ஆகியவற்றிற்கும் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளையே ஆப்பிள் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக ஐபோனின் முன் மற்றும் பின்பக்க க்ளாஸ் ஷீட்டுகளை (Glass sheet) அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் (Corning) நிறுவனத்திடம் இருந்தும், அவர்களுக்கான OLED பேனல்களை (OLED Panels) சாம்சங் (Samsung) மற்றும் எல்ஜி (LG) இடம் இருந்தும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறது ஆப்பிள்.

எது iPhone கேமரா ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமில்லையா?

மேலும், ஐபோனில் பயன்படுத்தப்படும் சிப்களைத் தாய்வான் செமிகன்டக்டிங் மானுஃபாக்சரிங் கம்பனி (Taiwan Semiconducting Manufacturing Company) தயாரித்துத் தருவதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக அதிக வெளிச்சத்தை உள்ளிட்டுக் குறைந்த அல்லது அதிகப்படியான வெளிப்பாடுகளை (under or over exposure) தவிர்க்கும் புதிய சென்சார் ஒன்றைச் சோனி நிறுவனம் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபோனின் இனி வரும் மாடல்களில் இந்தக் கேமரா சென்சார் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு ஏன், விரைவில் அறிமுகம் படுத்தப்படவிருக்கும் ஐபோன் 15 அல்ட்ராவிலே (iPhone 15 Ultra) இது மாதிரியான சென்சார் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இறுதியில், ஆப்பிள் என்ற உலக முன்னணி பிராண்ட் அதன் சாதனங்களில் பல முன்னணி பிராண்ட்களிடம் இருந்து கிடைக்கும் கூறுகளை நம்பியே செயல்படுவது இப்போது அம்பலமாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tim Cook Admits The Truth On Twitter Revealing Apple Gets iPhone Image Sensors From Sony
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X