18 வயது பெண் டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை! ஆப் தடை தான் காரணமா? சந்தேகத்தில் போலீஸ்!

|

இந்தியா சமீபத்தில் சீனாவின் 59 மொபைல் பயன்பாட்டு ஆப்ஸ்களை தடை செய்தது. இதில் குறிப்பாகப் பல மில்லியன் பயனர்களைக் கொண்ட டிக்டாக் பயன்பாடும் தடை செய்யப்பட்டது. இந்த தடைக்குப் பல தரப்பிலிருந்து வரவேற்பு இருந்தாலும் கூட, டிக்டாக் பயனர்களுக்கு ஒரு புறம் இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையே உருவாகியுள்ளது. டிக்டாக் தடை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

18 வயது இளம் மாணவி

18 வயது இளம் மாணவி

டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 18 வயது இளம் மாணவி, பல வருடங்களாக டிக்டாக் பயனராக இருந்து வந்திருக்கிறார். டிக்டாக் பயன்பாட்டில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இளம் டிக்டாக் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது வீட்டில் உள்ள அவரின் தனி அறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

காலை விடிந்தும் அறையைவிட்டு இளம் பெண் வெளியில் வரவில்லை என்று அவருடைய உறவினர்கள், மாணவியின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு அவரின் உடல் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, டிக்டாக் வீடியோ ஷேரிங் பயன்பாட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளார். டிக்டாக் தடை செய்யப்பட்டது அவருக்கு மனச்சோர்வை உருவாக்கியது என்று கூறியுள்ளனர்.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இருப்பினும், மாணவியின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அவர் கடந்த 2-3 மாதங்களாக மனச்சோர்வுடன் தான் சுற்றித்திரிந்தார் என்றும் கூறியுள்ளனர். ஆனால், சரியான காரணம் என்ன என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், இளம் டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை செய்துகொண்டது டிக்டாக் பயனர்களிடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.

அதிகரிக்கும் தற்கொலைகள்

அதிகரிக்கும் தற்கொலைகள்

இன்றைய காலத்தில் இளைஞர்களிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது. பொதுவான பிரச்சனைகளுக்கு கூட இளைஞர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர் என்கிறது ஆய்வு. அற்பமான பிரச்சனைகளுக்கு கூட சிலர் தங்களின் உயிரை இழக்கின்றனர். குறிப்பாக ஒரு அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை வழக்குகள் தான் அதிகம் என்கின்றனர்.

1000 ராக்கெட் விட்டு என்ன புண்ணியம்.? இதை புரிந்துகொள்ள முடியவில்லையே.!?1000 ராக்கெட் விட்டு என்ன புண்ணியம்.? இதை புரிந்துகொள்ள முடியவில்லையே.!?

தற்கொலைக்கு பதிலாக இதை செய்யுங்கள்

தற்கொலைக்கு பதிலாக இதை செய்யுங்கள்

சில பிரபலங்கள் கூட அண்மையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சமீபத்தில் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனச்சோர்வடைந்த ஒருவர் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார்கள், இதற்குப் பதிலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகுங்கள்.

Best Mobiles in India

English summary
TikTok Star 18 Year Old Girl Commits Suicide After The App Ban In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X