1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு!

|

டிக்டாக் செயலிக்கு இணை மாற்றாக பங்கா செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் போட்டிகள் அறிவிக்கப்படுவதோடு பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு பணம் அளிக்கப்படுகிறது. இந்த செயலி ஒரே வாரத்தில் ஒரு லட்சம் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து

சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிடத் தொடங்கினார். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது, மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் இது பிரதானமாக திகழ்ந்தது.

இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும்

இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும்

இந்த நிலையில் உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு என்ற சவாலில் பங்கேற்கும்படி இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தொழில்நுட்ப சமூகத்தில் இந்திய தயாரிப்புகளை அதிகரித்து பிரதானமாக ஆக்க வேண்டும் என்பதன் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1 வாரத்தில் மட்டும் 1 லட்சம் பதிவிறக்கங்கள்

1 வாரத்தில் மட்டும் 1 லட்சம் பதிவிறக்கங்கள்

இந்த நிலையில் டிக்டாக் இணை மாற்றாக பங்கா செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி 1 வாரத்தில் மட்டும் 1 லட்சம் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. இந்த பங்கா செயலியில் டிக்டாக் செயலியை விட சிறந்த வசதிகள் உள்ளது என்றே கூறலாம்.

ரியாலிட்டி தொழில்நுட்பம் இதில் அடக்கம்

ரியாலிட்டி தொழில்நுட்பம் இதில் அடக்கம்

இந்த செயலியை பயன்படுத்துவதற்கு சிறந்த வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு ரியாலிட்டி தொழில்நுட்பம் இதில் அடக்கம். இதில் வீடியோ பதிவிடுபவர்களுக்கு பணம் ஈட்டுவதற்கான ஏற்பாடுகளையும் பங்கா செயலி செய்துள்ளது.

பங்கா செயலியில் வீடியோ பதிவேற்றம்

பங்கா செயலியில் வீடியோ பதிவேற்றம்

பங்கா செயலியில் வீடியோ பதிவேற்றுபவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வீடியோ பதிவேற்றாளர்கள் பரிசுகளை அள்ளிச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளானது ஹேஷ்டேக்கள் மற்றும் பாடல்கள் பெயரில் நடத்தப்படுகிறது. அதேபோல் முதல் மாதத்தில் மட்டும் ரூ.1 கோடி அளவு மதிப்பிலான பரிசுகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்கா செயலி உள்நாட்டு தயாரிப்பு

பங்கா செயலி உள்நாட்டு தயாரிப்பு

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பங்கா செயலி உள்நாட்டு தயாரிப்பாகும் மேலும் இதன் பயனர்களின் தகவல் உள்நாட்டு செர்வர்களிலேயே சேமிக்கப்பட்டு வைக்கப்படுகிறது. எனவே இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்த குறைபாடும் இருக்காது என கருதப்படுகிறது.

source: businessworld.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tiktok replace panga app: Panga reach 100000 viewers in one week

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X