100 கோடி பயனர்கள்: டிக்டாக் படைத்த புது சாதனை- ஏற்றம் முன்னேற்றம் தான்!

|

டிக்டாக் உலகளவில் மாதாந்திரம் 1 பில்லியன் பயனர்களை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தங்களது பயனர்களுக்கு நிறுவனம் தரப்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிக்டாக் செயலிக்கு அதிகளவு வரவேற்பு

டிக்டாக் செயலிக்கு அதிகளவு வரவேற்பு

உலகெங்கிலும் டிக்டாக் செயலிக்கு என பயனர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். டிக்டாக் செயலியானது சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ்-க்கு சொந்தமானது. டிக்டாக் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடு குறித்து பார்க்கையில், அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகும். ஜூலை 2020 முதல் இந்த செயலிக்கு 45 சதவீத பயனர்கள் அதிகரித்துள்ளனர்.

மாதம் 100 கோடி பேர்

மாதம் 100 கோடி பேர்

இந்த செயலிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 5.5 கோடி தினசரி பார்வையாளர்களை கொண்ட நிலையில் தற்போது இந்த செயலியை மாதம் 100 கோடி பேர் உபயோகிக்கின்றனர் என அந்த நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை இந்த குறுகிய வீடியோ பயன்பாட்டிற்கான மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் பயனர்கள் எண்ணிக்கை

தொடர்ந்து அதிகரிக்கும் பயனர்கள் எண்ணிக்கை

கடந்த சில ஆண்டுகளில் டிக்டாக் உலகெங்கிலும் தொடர்ந்து பயனர்கள் அதிகரப்பை சந்தித்து வருகிறது. தற்போது மாதம் 100 கோடி பேர் டிக்டாக் செயலியை உபயோகித்து வருகின்றனர். அதேபோல் பேஸ்புக் செயலியை மாதம் 350 கோடி பயனர்களையும், யூடியூப் 345 கோடி பயனர்களையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியானது ஜனவரி 2018-ல் சுமார் 55 மில்லியன் உலகளாவிய பயனர்களை கொண்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 2018-ல் 271 மில்லியன் பயனர்களையும் டிசம்பர் 2019-ல் 5.8 மில்லியன் பயனர்களையும், ஜூலை 20200ல் 689 மில்லியன் பயனர்களையும் கொண்டுள்ளது. குறுகிய வீடியோ பகிர்வு தளமான டிக்டாக் சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமானது. டிக்டாக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டார்.

சீன செயலிகளுக்கு தடை

சீன செயலிகளுக்கு தடை

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று வெளியான தகவலை டிக்டாக் மறுத்தது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த திட்டமும் இல்லை என்பதை டிக்டாக் உறுதிப்படுத்தியது. சீனாவின் பைட் டான்ஸூக்கு சொந்தமான வீடியோ பதிவேற்றம் தளமான டிக்டாக், இந்த செயலியை இந்தியாவில் மீண்டும் ஓபன் செய்வது குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு

சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு

இந்திய அரசாங்கத்தின் தடை தொடர்பாக டிக்டாக் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியாகின. ஆனால் அத்தகைய நடவடிக்கையைத் தொடர எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என டிக்டாக் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

இந்தியாவில் பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்த அளவிற்கு டிக்டாக்கின் ரசிகர்களாக அதன் வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்த பிறகு அதற்கு இணை மாற்று செயலியாக பல்வேறு செயலிகள் வெளியாகின. சிங்காரி செயலி(Chingari), ரோபோஸ் (Ropos), யோபிளே (Yoplay), விஸ்கிட் (Vskit), ரிஸில்(Rizzle), பிரில்லா(Brilla) உள்ளிட்ட பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற பயன்பாடுகளும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
TikTok Reaches 1 Billion Active Monthly Users: Indicating Steady Growth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X