கொரோனாவை தடுக்க டிக்டாக் அதிரடி: புதிய அம்சம் அறிமுகம்., அனைவரும் பயன்படுத்தலாம்!

|

கொரோனாவை தடுக்க டிக்டாக் சிறப்பு அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் அதன் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவின் ஹூவாய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது

பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 70 ஆயிரத்து 953 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!

20 லட்சத்து 62 ஆயிரத்து 171 பேருக்கு சிகிச்சை

20 லட்சத்து 62 ஆயிரத்து 171 பேருக்கு சிகிச்சை

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 62 ஆயிரத்து 171 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுவர்களில் 49 ஆயிரத்து 975 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

10 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

அதேபோல், வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் எண்ணிக்கை

அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் எண்ணிக்கை

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் எண்ணிக்கை குறித்து பார்க்கையில் அமெரிக்கா 64,942, ஸ்பெயின் 24,824, இத்தாலி 28,236,
இங்கிலாந்து 27,510, பிரான்ஸ் 24,594, ஜெர்மனி 6,662, ஈரான் 6,091, பிரேசில் 6,017 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நன்கொடை

250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நன்கொடை

கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளில் 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நன்கொடை அளித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசுக்கு ஒத்துழைக்கும் விதமாக போலி செய்திகளை தடுக்க டிக்டாக் நிறுவனம் சிறப்பம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தவறாக வழிநடத்தும் தகவல்

தவறாக வழிநடத்தும் தகவல்

கொரோனா குறித்து பல்வேறு போலி தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதை தடுப்பதற்கு சமூகவலைதள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் டிக்டாக் நிறுவனம் தவறாக வழிநடத்தும் தகவல் அதாவது misleading information என்ற தலைப்பில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தவறான தகவல்கள் குறித்து புகார் அளிக்கலாம்

தவறான தகவல்கள் குறித்து புகார் அளிக்கலாம்

கோவிட் 19 குறித்த தவறான தகவல்களைப் புகாரளிக்க மட்டுமல்லாமல் பிற தலைப்புகள் குறித்தும் புகாரளிக்க பயனர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பகிர்> அறிக்கை> தவறான தகவல்> கோவிட் -19 தவறான தகவல்> சமர்ப்பி (Share > Report > Misleading Information > Covid-19 misinformation > Submit). இந்த வழிமுறையின்படி தவறான தகவல்கள் குறித்து புகார் அளிக்கலாம்.

போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

உள் பணிக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் மூன்றாம் தரப்பு உண்மை-சரிபார்ப்பவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு போலி செய்திகளை கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படி தான் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கிறோம்: பில்கேட்ஸ் சொன்ன விளக்கம்!இப்படி தான் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கிறோம்: பில்கேட்ஸ் சொன்ன விளக்கம்!

பொது மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

பொது மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் போராடி வருகிறது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏணைய நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்றன. இது அனைத்தும் ஒருபுறம் இருக்க பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.

Best Mobiles in India

English summary
Tiktok introduced new features to stop covid19 related fake news

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X