Home
News

டிக் டாக் தோழிக்கு பிரச்சனை வரக்கூடாது: தோழியுடன் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் ஆஜர்.

டிக் டாக் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக நேரம் பயன்படுத்தி வீடியோக்களை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த வினிதா(20) என்ற பெண்ணுக்கும், காளையார்கோவில் அருகே உள்ள சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ (25) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரைச் சேர்ந்த அபி

திருவாரூரைச் சேர்ந்த அபி

பின்பு ஆரோக்கிய லியோ மற்றும் வினிதா இருவரும் காளையர்கோவில் வசித்து வந்தனர். வினிதா டிக் டாக் செயலி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக்டாக் செயலியில் வினிதாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவதும் டிக் டாக் செயலி மூலம் பாடல்களுக்கு ஏற்ப நடித்து ஒருவருக்கு ஒருவர் அனுப்பியும் செல்போனில் பேசியும் வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

 நகையை எடுத்து சென்றதாகவும் புகார்

நகையை எடுத்து சென்றதாகவும் புகார்

இந்த டிக்டாக் மூலம் பிரச்சனை ஏற்பட்டு வினிதாவை அவரது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் கனவர் ஆரோக்கியலியோ.மேலும் சமீபத்தில் அங்கிருந்து வினிதா காணாமல் போனர், டிக் டாக் தோழியுடன் அவர் மாயமானதாகவும்,தாய் வீட்டில் இருந்து நகையை எடுத்து சென்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதுபற்றி திருவேகம்புத்தூர் போலீசார்வழக்கு பதிவு செய்து வினிதாவை தேடி வந்தனர்.

 நேற்று மாலை 5மணி

நேற்று மாலை 5மணி

மயமான வினிதா திடீரென நேற்று மாலை 5மணி அளவில் சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அஜரானர்.அவரிடம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்கள் விசாரணை நடத்தினார். குறிப்பாக வினிதா வழக்கு
திருவேகமப்புத்தூர் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து போலீசார் வந்து வினிதாவை அழைத்து சென்றனர்.

வினிதா கூறியது இதுதான்

வினிதா கூறியது இதுதான்

திருமணத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட நகைகளை அடகு வைத்துதான் எனது கனவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தேன் என முதலில் தெரிவித்தால். பின்பு திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது என்றும் இது தனது கனவருக்கும் தெரியும் என வினிதா கூறினார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து கடந்த 18-ம் தேதி தனது கனவர் தீடிரென ஊருக்கு வந்தால், என்ணை அவர் சந்தேகப்பட்டு அடித்தார்,இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது, இதனால் நான் நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன் என வினிதா கூறினார்.

தோழிக்கு பிரச்சனை வரக்கூடாது

தோழிக்கு பிரச்சனை வரக்கூடாது

டிவிகளில் நான் நகையுடன் டிக் டாக் தோழியுடன் மாயமானதாக செய்திகள் வெளியானது, இதை பார்த்த நான் எனது சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர் போலீசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன் என வினிதா கூறினார். பிறகு நான் வீட்டில் 6பவுன் தங்க சங்கலி மற்றும் பிரேஸ் லெட்டுடன் மட்டும்தான்சென்றேன், மற்றபடி எந்த நகையையும் எடுத்த செல்லவில்லை என்று தெரிவித்தார். குறிப்பாக தவறான செய்திகளால்
டிக் டாக் தோழிக்கு பிரச்சனை வரக்கூடாது என்றுதான், போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன் எனவினிதா தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
TikTok: Husband Given Fake Complaint On Wife For Using Tiktok Videos: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X