தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்
டிக்டாக் செயலியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற காலம் வந்து விட்டது. பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இந்தியாவில் டிக்டாக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்டு, பின் தடை நீக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியது அதன் பயனாளர் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹெலோ பைட்டேன்ஸ் நிறுவனங்கள் பதில் அளிக்கக் கோரி 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அளித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமைச்சகம் எடுத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அளித்த குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ். அளித்த குற்றச்சாட்டுகளில் இரு செயலிகளில் தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தரவுகள் அதிகளவு பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களின் தகவல்கள்
இதுதவிர இந்தியர்களின் தகவல்கள் வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

அரசியல் வீடியோக்கள் மற்றும் போலி செய்திகள்
டிக்டாக் செயலியை பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றியும் மத்திய அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஹலோ செயலியில் இருக்கும் சுமார் 11,000-க்கும் அதிக அரசியல் வீடியோக்கள் மற்றும் போலி செய்திகள் பற்றி பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள்
ஜூலை 22 ஆம் தேதிக்குள் டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. பதில் அளிக்காத பட்சத்தில் இந்திய பிளே ஸ்டோர்களில் இருந்து செயலிகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.

முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளன
தற்போதைய நிலையில், டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் அரசு உத்தரவுகளை பின்பற்றி அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications