விடைகொடு மனமே: "அன்புள்ள பயனர்களே" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை!

|

டிக்டாக், ஹலோ செயலி இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்தும் டிக்டாக் செயலிக்கான மாற்று இந்திய செயலிகள் குறித்தும் பார்க்கலாம்.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

டிக்டாக் செயலியில் அதிகப்படியான நேரத்தை செலவிட்ட இந்தியர்கள்

டிக்டாக் செயலியில் அதிகப்படியான நேரத்தை செலவிட்ட இந்தியர்கள்

குறிப்பாக டிக்டாக் செயலியில் இந்தியர்கள் பெரும்பாலானோர் தங்களது அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவுகள் எடுத்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் செயலி முற்றிலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

59 செயலிகள் தடை குறித்து இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரை

சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரை

இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.

டிக்டாக் முற்றிலும் தடை

டிக்டாக் முற்றிலும் தடை

டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமே கிடைக்காது எனவும் தற்போது மொபைலில் வைத்திருக்கும் பயனர்கள் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இப்போது டிக்டாக், ஹலோ போன்ற செயலிகள் எதிலும் ஓபனாக வில்லை.

அன்புள்ள பயனர்களே.,

அன்புள்ள பயனர்களே.,

டிக்டாக் செயலி திறக்கும் போது அது ஒரு பிழையைக் காட்டுகிறது. அதில் "அன்புள்ள பயனர்களே, 59 பயன்பாடுகளைத் தடுக்க இந்திய அரசின் உத்தரவுக்கு இணங்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்கள் அனைவரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் முன்னுரிமையாக உள்ளது" என காட்டப்படுகிறது.

செயலி எதிலும் திறக்கவில்லை

செயலி எதிலும் திறக்கவில்லை

அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு இணங்க, டிக்டாக் நிறுவனம் முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. டிக்டாக் செயலி ஓபனாகவில்லை என சிலர் வருத்தம் தெரிவித்தாலும் முன்னதாக டிக்டாக் தரப்பில் இருந்து ஒரு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி

முன்னதாக டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் உத்தரவுக்கு தங்கள் நிறுவனம் கீழ்படிந்து நடக்கும் எனவும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து ரகசியத்தை காக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு தங்களது பயனர்களின் எந்த ஒரு சிறு விவரங்களையும் சீன உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துக் கொண்டது கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஹலோ செயலியும் எதிலும் ஓபனாகவில்லை

ஹலோ செயலியும் எதிலும் ஓபனாகவில்லை

ஹலோ செயலியும் எதிலும் ஓபனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும் டிக்டாக் செயலி போன்ற வசனங்களே காண்பிக்கப்படுகின்றன. இந்திய அரசின் உத்தரவுக்கு இணங்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தங்களது இந்திய பயனர்களின் எவ்வித தகவலையும் எந்தவொரு வெளிநாட்டு அரசுடன் பகிரவில்லை என ஹலோ செயலியில் காண்பிக்கப்பட்டு வருகிறது.

சிங்காரி செயலி(Chingari)

சிங்காரி செயலி(Chingari)

சீன செயலியான டிக்டாக்கிற்கு மாற்றாக சிங்காரி என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இந்த செயலியானது பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியிருக்கின்றனர். இந்த தளமானது வீடியோ பகிர்வு, புதிய நண்பர்கள் உரையாடல், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பகிர்வு, தங்களது படைபாற்றலை வெளிப்படுத்தும் செயலியாகும். இந்த செயலியானது ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், பங்களா, குஜராத்தி, மராத்தி, மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

மிட்ரான்(Mitron)

மிட்ரான்(Mitron)

மிட்ரான் செயலியும் டிக்டாக் இணையான மாற்று செயலியாகும். இது இந்திய தயாரிப்பு செயலியான இதில் டிக்டாக்கிற்கு இணையாக வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்படுகின்றன. இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

டிக்டாக் தடை: இதெல்லாம் செய்ய ரெடியா இருக்கோம்- டிக்டாக் சொன்ன பதில்!

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின சீன தரப்பில் உயரிழப்பு எண்ணிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tiktok completely stopped in india says process of complying with indian government.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X