சும்மா இல்ல வீடியோக்கு பணம் தராங்க: டிக்டாக்கை மறக்கடிக்கும் சிங்காரி செயலி!

|

சிங்காரி ஆப் இந்தியாவில் 2.5 மில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. இந்த செயலியில் வீடியோக்களுக்கு பணம் பெற அனுமதிக்கிறது.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவு

டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவு

குறிப்பாக டிக்டாக் செயலியில் இந்தியர்கள் பெரும்பாலானோர் தங்களது அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவுகள் எடுத்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் செயலி முற்றிலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சிங்காரி செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது

சிங்காரி செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது

நாட்டில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்களை மேற்கோளிட்டு பிரபலமான 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்துள்ளது. டிக்டாக் செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலியான சிங்காரி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

2.5 மில்லியன் பதிவிறக்கங்கள்

2.5 மில்லியன் பதிவிறக்கங்கள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் சிங்காரி ஆப், 2.5 மில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. சிங்காரி ஆப் இந்திய வீடியோ பகிர்வு செயலியாகும். இது கடந்தாண்டு அறிமுகப்பட்டதில் இருந்து கூகுள் ப்ளே ஸ்டோரில் 2.5 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்து வருகிறது. இந்த செயலியானது ஒரு மாதத்தில் மட்டும் 100,000 டவுன்லோட்களை கொண்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த இரண்டு புரோகிராமரால் உருவாக்கம்

பெங்களூரைச் சேர்ந்த இரண்டு புரோகிராமரால் உருவாக்கம்

சிங்காரி செயலியானது பெங்களூரைச் சேர்ந்த இரண்டு புரோகிராமர்களால் உருவாக்கப்பட்டது. பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் என்ற இருவர் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.

வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

இந்த செயலியும் டிக்டாக் போன்றே ஒரு குறுகிய வீடியோ பகிர்வு செயலியாக இது இருக்கமுடியும். அதுமட்டுமின்றி குறுகிய வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்க இந்த வீடியோ அனுமதிக்கிறது. சிங்காரி செயலியில் குறுகிய கால வீடியோ பயன்பாட்டின் மூலம் பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. வீடியோ வைரலாகியதன் அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக விளையாட்டு மண்டலம் உள்ளது, அதில் விளையாடுவதற்கு அனுமதிப்போடு விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

இந்த செயலியானது ஆங்கிலம், தமிழ், இந்தி, பங்களா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர்

சிங்காரி செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று தேடுதல் இணைப்பில் சிங்காரி ஆப் என தேடினால் அதில் காண்பிக்கப்படும் சிங்காரி ஆப் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

தனியுரிமைக் கொள்கை பற்றிய விவரங்கள்

தனியுரிமைக் கொள்கை பற்றிய விவரங்கள்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தனியுரிமைக் கொள்கை பற்றிய விவரங்களையும் நிபந்தனைகளையும் காண்பிக்கிறது. இதில் கணக்கை உருவாக்குவதற்கு தொலைபேசி எண்களை பதிவிட வேண்டும். வாடிக்கையாளர்களின் எந்த ஒரு தகவலையும் பகிரவோ விற்கவோ இல்லை என தெரிவிக்கிறது.

மூன்று பிரிவுகளாக பிரிப்பு

மூன்று பிரிவுகளாக பிரிப்பு

அதன்பின் சிங்காரி செயலியில் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தலாம். இதில் பயன்பாடு, வீடியோக்கள் மற்றும் விளையாட்டு மண்டலம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

டிக்டாக்கிற்கு ஒரு சிறந்த மாற்று

டிக்டாக்கிற்கு ஒரு சிறந்த மாற்று

சிங்காரி செயலியில் சுவாரஸ்மாயான வீடியோக்களை எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய செயலியான சிங்காரி ஆப் டிக்டாக்கிற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tiktok banned in india: Chingari app allows to earn money

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X