திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை!

|

டிக்டாக் உள்ளிட்ட 58 பயன்பாடுகளுக்கு இந்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான விளக்கம் மற்றும் காரணம் குறித்து பார்க்கலாம்.

59 சீன பயன்பாடுகளுக்கு நிரந்தரமாக தடை

59 சீன பயன்பாடுகளுக்கு நிரந்தரமாக தடை

தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69 இன் கீழ் தடைசெய்யப்பட்ட சீன பயன்பாடுகள் மீண்டும் வரக்கூடம் என ஏதாவது நம்பிக்கை இருந்தால் அதை இன்றோடு மறந்துவிடுங்கள். காரணம் இந்தியாவில் 59 சீன பயன்பாடுகளுக்கு நிரந்தரமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக்டாக், பெய்டு, வீசாட், சேர்இட் உள்ளிட்ட பயன்பாடுகள்

டிக்டாக், பெய்டு, வீசாட், சேர்இட் உள்ளிட்ட பயன்பாடுகள்

டிக்டாக், பெய்டு, வீசாட், சேர்இட் உள்ளிட்ட பயன்பாடுகள் இவற்றில் அடக்கம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு தீங்குவிளைவிப்பதாகக் கூறி இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளுக்கு இந்திய அரசு தடை விதித்து அறிவித்தது. இவற்றில் 59 பயன்பாடுகளுக்கு இந்தியாவில் நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டு தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு வாய்ப்பு

பயன்பாட்டு தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு வாய்ப்பு

லைவ்மின்ட் மூலம் வெளியான அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகளின் பயனர்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க பயன்பாட்டு வெளியீட்டாளர்களுக்கு இந்திய அரசு வாய்ப்பளித்தது. இதுகுறித்து விரிவான கேள்விகளை இந்திய அரசாங்கம் பயன்பாட்டு தயாரிப்பாளர்களுக்கு அனுப்பியது.

இந்திய அரசை திருப்தி படுத்தும் விதமான தகவல் இல்லை

இந்திய அரசை திருப்தி படுத்தும் விதமான தகவல் இல்லை

இதற்கு பயன்பாட்டு தயாரிப்பாளர்கள் அளித்த பதில் இந்திய அரசை திருப்தி படுத்தும் விதமாக இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பயன்பாடுகளில் சிலவற்றை நாட்டில் நிரந்தரமாக தடை விதிக்க வாய்ப்புள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட 59 பயன்பாடுகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதா அல்லது தடை செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளில் இருந்து இந்த 59 பயன்பாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
TikTok and Other 58 Apps May Get Permanent Ban From India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X