டிக்டாக் மோகம்: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!

|

டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக அதிகளவு வீடியோ தினசரி பதிவிடப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் இந்த செயலியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்கொணர்வு மனு

ஆட்கொணர்வு மனு

இந்நிலையில் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனுக்கும், செவிலியர் ஒருவருக்கும் டிக்டாக் செவிலியர் ஒருவருக்கும் ஒரு டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டதில் மாணவனைத் திருப்பூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். பின்பு ஆட்கொணர்வு மனு மூலம் சிறுவன் மீட்கப்பட்டார்.

 டிக்டாக் மோகம்

டிக்டாக் மோகம்

குறிப்பாக டிக்டாக் மோகம் ஆண் பெண், சிறுவர், சிறுமியர் நடுத்தர வயதினர் யாரையும் விட்டு வைப்பதில்லை, டிக்டாக்கில் டபுள் விண்டோ இணைந்து பாடல் பாடுவது வசனம் பேசுவது போன்ற செயலிகளில் திருமணமான பெண்கள் வேறு ஆண்களுடன் டூயட் பாடுகின்றனர். இதில் பலரும் வரம்புக்குள் இருந்தாலும் சிலர் மட்டும் நட்பில் சிக்கி அது தொடர்ந்து தவறான பாதைக்குச் செல்கின்றனர்.

7வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு

7வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு

இந்த நிலையில் சிறுவன் ஒருவன் டிக்டாக் செயலியில் செவிலியர் ஒருவருடன் பழக்கமாகி டபுள் விண்டோவில் டூயட் பாடுவது, சினிமா டூயட் பாடுவது, சினிமா காதல் வசனங்களைப் பேசுவது என தொடர்ந்து நட்பு தன்னைவிட 7வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சிறுவனைக் கடத்திச் சென்றார் அந்தப்பெண் 9 மாதத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.!இந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.!

தந்தையோ துபாயில் தொழில் செய்து வருகிறார்

தந்தையோ துபாயில் தொழில் செய்து வருகிறார்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 16-வயது சிறுவன் சென்னை கிண்டியில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளான், அவரது தந்தையோ துபாயில் தொழில் செய்து வருகிறார். இந்த சிறுவன் டிக்டாக் செயலியில் அதிக ஆர்வமுடன் பல காதல் பாடல்களுக்கு நடிப்பது, சினிமா வசனங்களைப் பேசுவது என பல்வேறு வீடீயோக்களை பதிவு செய்துள்ளான்.

ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள்

ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள்

இதனாலேயே சிறுவனுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் இருந்துள்ளனர், இதிர் தஞ்சாவூரைச் சேர்ந்த 23வயது செவிலியர் ஒருவர் அவருடன் டக்டாக்கில் டபுள் விண்டோஸ் டூயட் பாடியுள்ளார் அதன்மூலம் நெருக்கமாகியுள்ளார். பின்பு இருவரும் டிக்டாக்கில் அதிக நேரம் செலவழித்துள்ளனர். இந்த டிக்டாக் நட்பு நாளடைவில் நெருக்கமாகி உள்ளது.

அக்டோபர் மாதம்

அக்டோபர் மாதம்

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மாணவர் தீடிரென மாயமானர், அவர் காணாமல்போனது துபாயில் இருக்கும் தந்தைக்குத் தெரியவர கிண்டி காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார். பின்பு வழக்கம்போல் மிஸ்ஸிங் கம்ப்ளைண்டாக பதிவ செய்து கிடப்பில் போட்டுவிட்டனர்.

 உயர் அதிகாரி ஆஜராக  நேரிடும்

உயர் அதிகாரி ஆஜராக நேரிடும்

தொடர்ந்து மாணவனின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய போலீஸார் விரைவில் சிறுவனைக் கண்டுபிடித்து விடுவதாகக் கூற நீதிமன்றம் வாய்ப்பு கொடுத்தது, ஆனால் அதன் பின்னரும் போலீஸார் அலட்சியம் காட்ட 3 முறை ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கலாக 4-வது துறை கோபமடைந்த நீதிபதி காவல் உயர் அதிகாரி ஆஜராக நேரிடும் என தெரிவிக்க போலீஸார் விரைவாகத் தேடினர்.

கல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொடர அரசு முடிவு.!கல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொடர அரசு முடிவு.!

 புதிய சிம்கார்டு

புதிய சிம்கார்டு

மேலும் சிறுவன் செல்போனில் பயன்படுத்திய சிம்கார்டை தூக்கிவிட்டு புதிய சிம்கார்டு இணைத்துப் பயன்படுத்தி வந்ததைக் கண்டுபடித்த போலீஸார் அதை டே;ரேஸ் செய்தபோது திருப்பூர் ஊற்றுக்குழி பகுதியை காட்டியது. பின்பு அங்குச் சென்று அந்த நபரை பிடித்தனர்.

 கையில் 40நாள் குழந்தை

கையில் 40நாள் குழந்தை

அவர் சென்னையில் சிறுவனுடன் பழகிய செவிலியர் என தெரியவந்து, கையில் 40நாள் குழந்தையுடன் இருந்த அவரிடம் சிறுவன் குறித்து போலீஸார் கேட்டபோது, சிறுவன் தன்னுடன்தான் இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்கும் பிறந்த குழந்தை இதுதான் என கூறியுள்ளார்.

18வயது நிரம்பாதவன்

18வயது நிரம்பாதவன்

பின்பு அங்கு வந்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், இருவரையும் சென்னை அழைத்து வந்துள்ளனர், போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சையில் தனக்கும் சென்னையில் இருந்த சிறுவனுக்கு டிக்டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து திருப்பூரில் கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இருவரையும் உயர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். குழந்தைக்குத் தந்தை என்றாலும், கணவன் என்று கூறினாலும் சிறுவன் 18வயது நிரம்பாதவன் ஆகவே அந்த பெண்ணின் மீது ஆட்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரசிகர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் ஒன்பிளஸ் கொடுத்த அதிர்ச்சி! புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்!ரசிகர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் ஒன்பிளஸ் கொடுத்த அதிர்ச்சி! புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்!

 ரூ.5லட்சம்

ரூ.5லட்சம்

குறிப்பாகக் கைக்குழந்தையின் நலன் கருதி அது தாயுடன் காப்பகத்தில் இருக்கவும்,குழந்தையின் பாதுகாப்புக்காக அதன்பெயரில் ரூ.5லட்சம் டெபாசிட் செய்யவும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. பின்பு அந்த சிறுவனும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Best Mobiles in India

English summary
tik tok women kidnapped 16 year old boy tik tok teenager : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X