தடை தாண்டி வந்த டிக் டாக் செயலி: பிளேஸ்டோரில் மீண்டும் விஸ்பரூபம்.!
இந்நிலையில், பிறகு நிபந்தைனயுடன் நீதிமன்றம் டிக் டாக்கை வெளியிட்டது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலி திரும்ப வந்துள்ளது.
டிக் டாக் செயலியை சிறயவர்கள் முதல் பெரியோர் வரை பயன்படுத்தி வந்தனர். இளைஞர்களையும் இந்த செயலி வெகுவாக கவர்ந்தது. மேலும், இதில், ஆபாச நடனத்தையும் பெண்கள் அரங்கேற்றி வந்தனர்.

இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடரப்பட்டதால், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செயலிலை தடை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், பிறகு நிபந்தைனயுடன் நீதிமன்றம் டிக் டாக்கை வெளியிட்டது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலி திரும்ப வந்துள்ளது.

400 பேர் தற்கொலை:
டிக் டாக் செயலியை பயன்படுத்தி 400க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும், தீமையை தரும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ். முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

மத்திய அரசுக்கு உத்தரவு:
டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டழ. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

டிக் டாக் செயலிக்கு தடை நீக்கம்:
டிக் டாக் செயலி சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்கள் சிறுவர் சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது.
அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சநதிக்க நேரிடும் என்று நிபந்தைனயுடன் டிக் டாக் செயலிக்கு தடையை நீக்கியது.

பிளே ஸ்டேரில் டிக் டாக்:
கோர்ட் உத்தரவை அடுத்து நீக்கப்பட்ட டக் டாக் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோருக்கு பதிவிறக்கம் செய்யும் வகையில் வந்துள்ளது.

இளைஞர்கள் மகிழ்ச்சி:
இதனால் தங்களது திறமைகளை காட்டும் விதமாக டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வகையில் வந்துள்ளதால், இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications