ரூ.205 கோடிக்கு ஏலம் போன டிக்கெட்: ஜெஃப் பெசோஸ் உடன் இவரும் விண்வெளி செல்கிறார்!

|

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் விண்கல பயணத்துக்கான வாய்ப்பை ரூ.205 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். விண்ணுக்கு செல்லும் விவரங்கள் மற்றும் விண்ணுக்கு செல்லும் ஜெஃப் பெசோஸ் மனநிலை குறித்து பார்க்கலாம்.

விண்வெளி தொடர்பான ப்ளூ ஆரிஜின் நிறுவனம்

விண்வெளி தொடர்பான ப்ளூ ஆரிஜின் நிறுவனம்

ஜெஃப் பெசோஸ் என்று கூறியதும் நினைவுக்கு வருவது அமேசான் நிறுவனம்தான். ஜெஃப் பெசோஸ் அடுத்தடுத்த இலக்கோடு அவரது விண்வெளி தொடர்பான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ப்ளூஆரிஜின் நிறுவனத்தின் நியூ செப்பர்ட் விண்கலம் ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

விண்கலத்தில் 6 பேர் பயணிக்கலாம்

விண்கலத்தில் 6 பேர் பயணிக்கலாம்

ஜூலை 20 ஆம் தேதி விண்ணுக்கு செல்லும் நியூசெப்பர்டு விண்கலத்தில் மொத்தம் 6 பேர் பயணம் மேற்கொள்ளலாம். இதில் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது தம்பி விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மீதமுள்ள இருக்கைகள் ஏலத்தில் விற்க முடிவு செய்யுப்பட்டது.

159 நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டி

அதன்படி நடந்த ஏலத்தில் விண்வெளி செல்வதற்கான இருக்கைக்கு 159 நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டிப் போட்டனர். இந்த போட்டியில் ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். விண்வெளி பயணத்துக்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டதில் அதிகபட்சமாக ஒருவர் ரூ.205 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.205 கோடிக்கு ஏலம் போனதாக மட்டும் ப்ளூஆர்ஜின் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஏலம் எடுத்த நபரின் பெயர் தெரிவிக்கவில்லை.

நான்கு மற்றும் ஐந்தாவது பயணிகள் விவரம் விரைவில்

நான்கு மற்றும் ஐந்தாவது பயணிகள் விவரம் விரைவில்

மேலும் அடுத்தக்கட்டமாக நான்கு மற்றும் ஐந்தாவது பயணிகள் விவரம் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், தனக்கு ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என கனவு கண்டதாக குறிப்பிட்டார். ஜெஃப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவரது அவரது சகோததர் மார்க்கும் செல்கிறார். இந்த பயணம் ஜூன் 20 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேலே செலவழிக்கும் நான்கு நிமிடங்கள் உட்பட 10 நிமிடங்கள் பயணம் நீடிக்கும்.

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல் காம்போ ஆறு பயணிகளுடன் பூமியில் இருந்து 62 மைல்-க்கு மேலாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து வயது கனவு

ஐந்து வயது கனவு

ஐந்து வயது முதல் விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டேன். விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேறுவிதமான உருவத்தை கொடுக்கிறது. நான் இதில் பறக்க விரும்புகிறேன். காரணம் இது வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒரு விஷயம் ஆகும் என ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.

File Images

Best Mobiles in India

English summary
Tickets for space travel With Jeff Bezos Auctioned for 28 Million Dollar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X