பிரமாண்ட பலுானில் விண்வெளிக்கு செல்ல ஆசையா? டிக்கெட் விலை மற்றும் முழு விவரம்.!

|

இப்போது வரும் ஒரு சில புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனையை துவங்கி உள்ளது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்பேஸ்
பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம். கண்டிப்பாக இந்த விண்வெளி சுற்றுலா மக்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

பெர்ஸ்பெக்டிவ்

வெளிவந்த தகவலின்படி, பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் பிரமாண்ட பலூனில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்று பூமியின் அழகை ரசிக்கும் வாய்ப்பை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த பிரமாண்ட பலூன் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ் நிறுவனத்தை சேர்ந்த

மேலும் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தை சேர்ந்த ஜேன் பான்ட்டர் என்பவர் கூறியது என்னவென்றால், இந்த பிரமாண்ட பலூனில் விண்வெளி சுற்றுலாவுக்கு மக்களை அழைத்து செல்லும் வரத்தகத்தில் இறங்கியுள்ளோம். எனவே இதற்கு வேண்டி அதிநவீன பலூனை ஹீலியம் வாயு வாயிலாக ஒரு கால்பந்து மைதானத்தின் விட்டத்திற்கு விரிவுபடுத்தி, விண்ணில் செலுத்துகிறோம் என்று கூறினார்.

அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் விஐ- இப்போ ரூ.128 விலையில் அட்டகாச சலுகை!அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் விஐ- இப்போ ரூ.128 விலையில் அட்டகாச சலுகை!

ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய்

அண்மையில் ஆளில்லாமல் அனுப்பிய பலூன் வெற்றிகரமாக 1 லட்சம் மீட்டர் உயரம் பறந்து, பத்திரமாக தரையிறங்கியது. எனவே இதை தொடர்ந்து மனிதர்களை பலூனில் விண்வெளிக்கு அழைத்து செல்ல உள்ளோம். ஆறு மணி நேரத்திற்கு ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய்
எனவும் தெரிவித்துள்ளனர்.

வீரர்களை எதிரிகளின் கண்களில் சிக்காமல் மறைக்கும் புதிய தொழில்நுட்பம்.. இஸ்ரேல் சோதனை..அடுத்து யார் தெரியுமா?வீரர்களை எதிரிகளின் கண்களில் சிக்காமல் மறைக்கும் புதிய தொழில்நுட்பம்.. இஸ்ரேல் சோதனை..அடுத்து யார் தெரியுமா?

 ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட எட்டு

அதேபோல் ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட எட்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் 300 பேர் பணம் செலுத்தி விட்டனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக2024-ம் ஆண்டு வரை சுற்றுலா பயணத்திற்கான பதிவு முடிந்து விட்டது எனவும் கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

ஆண்டுக்கான முன்பதிவு

தற்போது 2025-ம் ஆண்டுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பலூனில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமியிடம் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்: காரணம் இதுதான்.!சிறுமியிடம் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்: காரணம் இதுதான்.!

ல் இருந்து பூமியை தெளிவாக பார்த்து ரசிக்கும் வகையில் சிறந்த வசதி

பின்பு விண்ணில் இருந்து பூமியை தெளிவாக பார்த்து ரசிக்கும் வகையில் சிறந்த வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன எனவும், இணையம் வாயிலாக பூமியில் உள்ள உறவினர்களுடன் நேரடியாக பேசும் வசதியும் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த பயணம் மக்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Ticket sales for space travel in the Balloon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X