இனிமேல் சாட்டிலைட் போன் தான். துரயா அறிமுகம் செய்யும் எக்ஸ்5 டச் போன்

|

செல்போனில் அடிக்கடி நெட்வொர்க் இல்லாத அனுபவத்தை கிட்டத்தட்ட அனைத்து செல்போன் பயனாளிகளும் அனுபவித்திருப்பார்கள். இந்த பிரச்சனையை போக்குவதற்கு ஒரே வழி சாட்டிலைட் மொபைல் போன் மட்டுமே என்று முடிவு செய்தது துரயா நிறுவனம். ஆம் தற்போது துரயா நிறுவனம் முதல் ஆண்ட்ராய்ட் சாட்டிலைட் போன் ஆன எக்ஸ்5 டச் என்ற மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் சாட்டிலைட் மற்றும் ஜி.எஸ்.எம் பவர் என இரண்டு வகையிலும் வருகிறது.

இனிமேல் சாட்டிலைட் போன் தான். துரயா அறிமுகம் செய்யும் எக்ஸ்5 டச் போன்

இந்த எக்ஸ்5 டச் சாட்டிலைட் போனை கொண்டவர்கள் மிக எளிதில் சாட்டிலைட்டில் இருந்து ஜி.எஸ்.எம் கனெக்சனை பெற முடியும்., ஹோம் ஸ்க்ரீனில் சாட்டிலைட்டுடன் நெட்வொர்க் இணைந்ததற்கான விட்ஜெட்டையும் பார்க்க முடியும். மேலும் இந்த சாட்டிலைட் போனில் ஆண்ட்ராய்டு செயல்படும் என்பதால் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள எந்த ஒரு செயலியையும் பயன்படுத்த முடியும்

துரயா இதுவரை எக்ஸ்5 டச் மாடலின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த போனில் ஐபி67 சான்றிதழ், அதிகளவு கெப்பாசிட்டி உள்ள பேட்டரி மற்றும் எஸ்.ஓ.எஸ் பட்டன் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த போனில் வைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் என்.எஃப்.சி ஆகிய கனெக்சன் ஆப்ஷன்களும் உண்டு

மேலும் இந்த சாட்டிலைட் போனில் செயல்படும் வகையில் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் சில சிறப்பு அம்சங்கள் உள்ள செயலியை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் மிகச்சரியாக எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு இல்லை என்றாலும், மிகவிரைவில் சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது

வித்தியாசமான மாடல் மொபைல் போன்களை வெளியிடுவது துரயா நிறுவனத்திற்கு இது முதல் முறை அல்ல. ஐ.டி.ஆர்.ஐ நிறுவனத்தின் புரோட்டோடைப் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் பொல்டர் முறையிலான ஸ்மார்ட்போன்கள் குறித்த ஐடியாக்களாஇ கொடுத்த நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 6-ன் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் விலையை சொன்னால் நம்புவீர்களா?ஒன்ப்ளஸ் 6-ன் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் விலையை சொன்னால் நம்புவீர்களா?

இதுகுறித்த வீடியோ ஒன்றில் புரோட்டோடைப் குறித்த விபரங்கள் மற்றும் கமர்ஷியல் ஸ்டாண்டர்ட் குறித்த விபரங்களும் உள்ளன.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. கோ என்பவர் போல்டர் டைப் போன்களின் பின்னடைவு குறித்து சிந்தித்தவர். இந்த பின்னடைவுகளை ஐ.டி.ஆர்.ஐ நீக முயற்சித்தது. இந்த போல்டர் டைப் போனின் டிஸ்ப்ளேவின் உறுதியையும் அது உறுதி செய்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
Thuraya has announced the industry first Android satellite phone dubbed X5-Touch which is both a satellite and a GSM-powered smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X