Home
News

விமானத்தின் அருகே விழுந்த இடி: வைரலாகும் புகைப்படம்

தென் தீவின் மேற்கு கடற்கரைக்கு காலை கனமழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து பலத்த காற்று வீசும் எனவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

விமானத்தின் அருகே விழுந்த இடி: வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் நியூசிலாந்தில் ஆலங்கட்டி மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக டைமரூ, ஓமரூ பகுதிகளில் பெய்து வரும் ஆலங்கட்டி மழையின் பனிக்கட்டி ஒரு கோல்ஃப் பந்து அளவிற்கும் மேல் இருப்பதால் அவை வீட்டின் ஜன்னல், கண்ணாடி மற்றும் மேற்கூரையை சேதப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோன்று, செல்வைன், அஸ்பர்டான் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விமானம் பயணிகளை ஏற்றும் இடத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென விமானத்தின் அருகே மின்னல் ஒன்று தாக்கியது. இதில் விமானத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

விமானத்தின் அருகே விழுந்த இடி: வைரலாகும் புகைப்படம்

இந்த காட்சியை விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனின் மூலம் படம் பிடித்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Thunders attacked near by passenger flight in newzealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X