Home
News

பழைய மொபைல் போனிற்கு புதிய 4ஜி ஸ்மார்ட் போன் பரிசு.! வினோத போட்டி.!

இன்றைய சூழ்நிலையில் மாதத்திற்குக் குறைந்தது 10 புதிய ஸ்மார்ட் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

Mob Throw Contest: Get 4G Smart Phone For Old Phones - TAMIL

இன்றைய சூழ்நிலையில் மாதத்திற்குக் குறைந்தது 10 புதிய ஸ்மார்ட் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. மிஞ்சிப்போனால் ஒருவரால் 2 ஸ்மார்ட் போன் மட்டுமே பயன்படுத்த முடியும், அதற்கு மேல் யாராலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த முடியாது.

பழைய மொபைல் போனிற்கு புதிய 4ஜி ஸ்மார்ட் போன் பரிசு.! வினோத போட்டி.!

புதிய ஸ்மார்ட் போன்கள் தினமும், இந்திய தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் ஆக்கிக்கொண்டே தான் இருக்கிறது. புதிய ஸ்மார்ட் போன்கள் வாங்கினால் நாம் பயன்படுத்திய பழைய ஸ்மார்ட் போன்களை பரணில் அல்லது பீரோ லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தான்.

புதிய 4ஜி ஸ்மார்ட் போன் பரிசு

புதிய 4ஜி ஸ்மார்ட் போன் பரிசு

உங்கள் லாக்கரில் பூட்டி வைக்கப்பட்ட பழைய ஸ்மார்ட் போன்களுக்கு விமோசனம் கிடைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும், விமோசனம் மட்டுமல்ல கூடுதலாக உங்களின் பழைய ஸ்மார்ட் போன்ற்கு பதிலாக ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படுமென்பது தான் இந்த சூப்பரான செய்தி. ஆனால் இதில் உள்ள ஒரு சின்ன சூட்சமம் நிச்சயம் உங்கள் பழைய ஸ்மார்ட் போன்களுக்கு கவலை தரும் என்று தான் சொல்ல வேண்டும்.

இ-வேஸ்ட் ரீசைக்ளிங் முயற்சி

இ-வேஸ்ட் ரீசைக்ளிங் முயற்சி

மங்களூர் நகரத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் மற்றும் அவரின் குழு இ-வேஸ்ட் மற்றும் பயன்படாத மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை ரீசைக்ளிங் செய்யத் திட்டமிட்டு ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். உடுப்பி இல் உள்ள அரசு பி.யு கல்லூரி கோலியாங்கடி மைத்தனத்தில் பழைய மொபைல் போன்களை தூக்கி எரியும் போட்டியை அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருக்கிறது.

பழைய மொபைல்

பழைய மொபைல்

இந்தப் போட்டியில் பங்குபெற முன்பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்குபெறும் போட்டியாளர் அவர்களின் பழைய மொபைல் போன்களை போட்டி நடக்கும் மைதானத்திற்குக் கொண்டு வர வேண்டும். கொண்டு வரப்படும் மொபைல் போன் மாடல் எவ்வளவு பழையதாய் இருக்கிறதோ அவ்வளவு முன்னுரிமை வழங்கப்படும், நீங்கள் தூக்கி எரியும் தூரத்தை கணக்கில் கொண்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதல் பரிசு 4ஜி போன்.!

முதல் பரிசு 4ஜி போன்.!

அதிக தூரம் மொபைல் போன்னை தூக்கி எரியும் போட்டியாளரை வெற்றி பெற்றவராக அறிவித்து ஒரு புத்தம் புதிய 4ஜி ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது வெற்றியாளருக்கு ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என்று ரூபேஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

400 முன்பதிவு

400 முன்பதிவு

இந்தப் போட்டி பற்றிய விபரங்களை நேற்று தான் சமூக வலைத்தளங்களில் ரூபேஷ் குமார் ஷேர் செய்திருக்கிறார், இதுவரை சுமார் 400 முன்பதிவுகள் பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Throw your old phone, win 4G smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X