நல்ல முன்னேற்றம்- கையில காசு இல்லனா கூகுள் பே-ல போடுப்பா: நூதன வழிப்பறி., அதிர்ந்து போன இளைஞர்!

|

சென்னையில் இளைஞரின் வாகனத்தை மறைத்த வழிப்பறி கொள்ளையர்கள் மூன்று பேர் அவரை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.13,000 பணம் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொள்ளையர்கள் அந்த நபரிடம் கூகுள் பே-ல் பணம் பறித்ததோடு அந்த இளைஞரின் செல்போன், பைக்கை பறித்து சென்றனர்.

லிஃப்ட் கேட்டு வந்த நபர்

லிஃப்ட் கேட்டு வந்த நபர்

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது ஆவடி அருகே அவரிடம் ஒரு நபர் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். லிப்ட் கேட்ட நபர் சுற்றிலும் ஆட்டோக்கள் எதுவும் இல்லை எனவும் அருகில் இறங்கிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸாரின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட நபர் ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பரை சந்திப்பதற்கு பூந்தமல்லி நோக்கி சென்றிருக்கிறார். அப்போது வழியில் ஒருவர் லிஃப்ட் கேட்டு அவரது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். லிஃப்ட் கேட்ட நபர் அஜித்திடம் ஆட்டோக்கள் ஏதும் இல்லை எனவும் சிறிது தூரத்தில் அருகில் இறங்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித்தை மிரட்டி தாக்க முற்பட்டதாக புகார்

அஜித்தை மிரட்டி தாக்க முற்பட்டதாக புகார்

சில கிலோமீட்டர்கள் பயணம் செய்த பிறகு, அஜித் தனது இருசக்கர வாகனத்தை நோக்கி இரண்டு பேர் வருவதை கவனித்துள்ளார். இதையடுத்து அவர் வேகத்தை குறைத்துள்ளார். தொடர்ந்து அருகே வந்த இருவர் அஜித்தை தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இவர்களுடன் லிஃப்ட் கேட்டு ஏறிய நபரும் இணைந்து மூன்று பேரும் அஜித்தை மிரட்டி தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று பேரும் அஜித்தின் செல்போனை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். மேலும் அஜித்திடம் தங்கச்சங்கிலி, மோதிரம் உள்ளிட்டவைகளை பறித்ததாகவும் கூறப்படுகிறது.

கூகுள் பே மூலம் ரூ.13000 பணம் பறிப்பு

கூகுள் பே மூலம் ரூ.13000 பணம் பறிப்பு

அதோடு மட்டுமின்றி அஜித்திடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அஜித்தை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.13 ஆயிரத்தை தங்களது கணக்கிற்கு மாற்ற வற்பறுத்தி பரிவர்த்தனை செய்துள்ளனர். அஜித்தின் கணக்கில் மொத்தம் ரூ.13,000 இருந்ததால் கடவுச்சொல்லை வாங்கிய கொள்ளையர்கள் மொத்த பணத்தையும் மாற்றியுள்ளனர்.

போலீஸில் புகார் அளித்த இளைஞர்

போலீஸில் புகார் அளித்த இளைஞர்

பணம் மாற்றப்பட்ட பிறகு கொள்ளையர்கள் அஜித்தின் செல்போன் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு அவரை சாலையில் தள்ளிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அஜித் ஆவடி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் விசாரணை தொடங்கினர். கூகுள் பே செயலியின் மூலம் பணம் அனுப்பப்பட்ட எண், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை தொடங்கிய சில மணிநேரத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து பணம், நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை

அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் ஆகும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தற்போது பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். தற்போதைய நிலைப்படி இந்தியாவில் அதிகளவிலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையையே மேற்கொள்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் உள்ளன.

ஆன்லைன் மூலம் வழிப்பறி

ஆன்லைன் மூலம் வழிப்பறி

டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவையாகும். ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று
வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.

இருப்பினும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பெரிய தொகைகள் பரிமாற்றம் செய்யும்போது சிறிய தயக்கம் இருக்கும். வளரும் தொழில்நுட்ப காலத்தில் கையில் பணம் வைக்க தயக்கம் கொண்டு வங்கி கணக்கில் பணம் வைத்து ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். தற்போது ஆன்லைன் மூலம் மேற்கொண்ட வழிப்பறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Three robbers misled a youth in Chennai and stole Rs.13,000 through Google Pay

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X