சாலைகுழிகளை தவிர்த்து செல்ல செயலி! பாதுகாப்பான பயணம்..

|

இந்திய மாநகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் இன்னும் சிறப்பாக முன்னேற முடியாமல் இருப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அவற்றின் சாலைகளின் தரம். எவ்வளவு தான் சாலைகளை சரிசெய்தாலும் விரைவாகவே பல்லாங்குழி போல மாறி, நமது பயணத்தை சங்கடமாக மாற்றுவது மட்டுமல்லாமல் ஆபத்தானதாகவும் ஆக்குகிறது, அதுவும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு.

ஸ்டார்ட் அப் நிறுவனம்

ஸ்டார்ட் அப் நிறுவனம்

எவ்வாறாயினும் தற்போது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், நமது பயணத்தை சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற தீர்வை முன்வைத்துள்ளது.

 தீபன் பாபரியா, அவரது நண்பர் மிஷால் ஜரிவாலா

தீபன் பாபரியா, அவரது நண்பர் மிஷால் ஜரிவாலா

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான தீபன் பாபரியா, அவரது நண்பர் மிஷால் ஜரிவாலா மற்றும் தொழில்துறை பொறியியல் நிபுணர் நிகில் பிரசாத் மரோலி ஆகியோருடன் இணைந்நு ரோட்மெட்ரிக்ஸ் (RoadMetrics) என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். டீப் மெசின் லேர்னிங் கொண்டு இயங்கும் இது, நிகழ்நேரத்தில் சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் விரிசல்களைக் கண்டறிந்து மக்களுக்கு சிறந்த பாதையைத் தேர்வுசெய்ய உதவுகிறது .

இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்படும்

இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்படும்

இன்று நம்மிடம் உள்ள கூகுள் மேப்ஸ் செயலி முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டாலும், அது இன்னும் இந்திய நிலைமைகளுக்கு உகந்ததாக இல்லை. "இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்படும் மேப்ஸ்-ன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம்." என்கிறார் தீபன்.

சாலைக்குழிகளை விரிசல், செங்குத்து, கிடைமட்ட, அலிகேட்டர்

சாலைக்குழிகளை விரிசல், செங்குத்து, கிடைமட்ட, அலிகேட்டர்

ஸ்மார்ட்போன்களில் உள்ள படங்கள் மற்றும் சென்சார் தரவுகளை வைத்து, பயணிக்கும் பாதையில் உள்ள குறைபாடுகளைக் குறிக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு வழிமுறையானது, கிடைக்கும் தரவுகளை வைத்து சாலைக்குழிகளை விரிசல், செங்குத்து, கிடைமட்ட, அலிகேட்டர்(முதலைப்பள்ளம்) என வகைப்படுத்துகிறது.

சரிபார்ப்புக்காக சென்சார்

சரிபார்ப்புக்காக சென்சார்

நாங்கள் 12 வகையான சாலை குறைபாடுகளைக் கண்டறிகிறோம். செயற்கை நுண்ணறிவு/ மெசின் லேர்னிங் வழிமுறையானது இரண்டு வெவ்வேறு நகரங்களில் எடுக்கப்பட் 100,000 க்கும் மேற்பட்ட பட தரவு புள்ளிகளுடன் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதால், இது 90% க்கும் அதிகமான துல்லியத்தன்மை விகிதத்தை அடைய எங்களுக்கு உதவியது. மேலும் சரிபார்ப்புக்காக சென்சார் தரவையும் (முடுக்கமானி மற்றும் கைரோஸ்கோப்) சேகரிக்கிறோம் என்பதால், இது எங்கள் துல்லியத்தன்மை அதிகரிப்பதை உறுதி செய்கிறது. " என்கிறார் மிஷால் ஜரிவாலா.

பொருத்தமான வழிகளை பரிந்துரைக்கிறது

பொருத்தமான வழிகளை பரிந்துரைக்கிறது

இச்செயலியானது மொபைல் மற்றும் எண்டர்ப்ரைஸ் என இரண்டு வகைகளில் வெளிவருகிறது. மொபைல் வகையை பொறுத்தவரை, உங்களுக்கு விருப்பமான வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும்படி முதலில் கேட்டு, அதற்கேற்ற பொருத்தமான வழிகளை பரிந்துரைக்கிறது. சாலைகள் அவற்றின் நிலை எவ்வளவு நல்லது அல்லது கெட்டது என்பதைப் பொறுத்து வண்ண குறியீடாக இருக்கும். அதாவது பச்சை என்றால் மென்மையான சவாரி எனவும், சிவப்பு என்றால் செல்லும் வழி மிக மோசமானவை என குறிக்கும்.

1000 கிலோமீட்டர் சாலைகளை உள்ளடக்கியுள்ளனர்

1000 கிலோமீட்டர் சாலைகளை உள்ளடக்கியுள்ளனர்

இந்த மொபைல் செயலி தற்போது பீட்டா நிலையில் உள்ள நிலையில், எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல் 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்தைக் காட்டுகிறது.
இப்போதைக்கு அவர்கள் நாட்டில் 1000 கிலோமீட்டர் சாலைகளை உள்ளடக்கியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10,000 பாதைகளை எதிர்பார்க்கிறார்கள். மேலும் தற்போது சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து ஒரு பைலட் திட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Three Indian Guys Built An App To Avoid Deadly Potholes And Save People's Lives : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X