செம்ம 'போர்' அடிக்கும் டயலர் - இதோ சிறந்த மாற்றுக்கள்.!!
ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள டையலர் போர்டுக்கு மாற்றான காலிங் ஆப்ஸ் பற்றி ஓர் பார்வை.
இப்போது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தாதவர்களைக் காண்பது உலகின் எட்டாவது அதிசயத்தினைக் காண்பது போலவே ஆகிவிட்டது.அந்த அளவினுக்கு ஸ்மார்ட்போன்கள் எங்கெங்கும் நிறைத்து காணப்படுகின்றன.வருடா வருடம் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியும் அதன் தேவையும் அதிகரித்தவண்ணம் தான் உள்ளது.
அதில் நாம் யாருக்கேனும் கால் செய்ய வேண்டுமெனில் அந்த போனிலுள்ள டீபால்ட் டையலர் போர்டுகளையே பயன்படுத்துகிறோம்.அது சிலநேரங்களில் நமக்கு சலிப்பாகவும் இருக்கும்.
அத்தகைய நேரங்களில் நாம் அதற்கு மாற்றாக சில கால் ஆஃப்ஸ்களை பயன்படுத்தலாம்.அவை என்ன?மற்றும் அதுகுறித்த தகவல்கள் கீழே.

ஸ்மார்ட்போன்கள்:
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளைத் பொறுத்து அதற்கான தேவைகளும் அதிகரித்த வண்ணமே தான் உள்ளது.கணினி வழியாக செய்யக்கூடிய செயல்களைக்கூட இப்போது நாம் ஸ்மார்ட்போன் வழியாக செய்து முடித்துவிடலாம்.உலகினையே நம் உள்ளங்கைகளுக்குள்ளாக கொடுவந்துவிட்டன இந்த ஸ்மார்ட்போன்கள்.

ஆஃப்ஸ்கள்:
ஸ்மார்ட்போன்களை மேலும் பயனுள்ள மற்றும் பொழுதுபோக்காக உபயோகிக்கற வகையில் பல வகையிலான செயலிகள் இப்போது உள்ளன.அவை நமது ஸ்மார்ட்போன்களை மேலும் ஆச்சரியமளிக்கத்தக்கவகையில் பயன்படுத்தக்கூடியவகையில் மாற்றுகின்றன.

ட்ருகாலர்:
இந்த ஆப்பினை பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது காண்டாக்ட் லிஸ்ட் ல் இல்லாத நம்பர்களும் இவருடையது மற்றும் அதன் உரிமையாளர் பெயரினையும் கண்டறியலாம்.மேலும் இதில் பச்சை நிற புள்ளி காட்டப்படுமானால் நீங்கள் கால் செய்ய வேண்டுமென நினைக்கிறவர் உங்கள் அழைப்பினை எடுக்கிற நிலையில் உள்ளார் என்றும் சிவப்பு புள்ளியின் வழியாக வேறொரு அழைப்பில் உள்ளார் எனவும் கண்டறியலாம்.

ட்ரூப்:
இந்த ஆப்பின் வழியாக நாம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் வழியாக சாட் செய்வதனைப்போல சாட்,மற்றும் புகைப்படத்தினைக் கொண்டு காண்டாக்ட் களை உருவாக்கலாம்.மேலும் இதன் வழிய எஸ்எம்எஸ்,ரிமைண்டர்,வாய்ஸ் கால் ரெகார்ட் உள்ளிட்ட வற்றையும் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்அவுட்ஸ் டையலர்:
கூகுளின் ஹாங் அவுட்ஸ் மெசேஜ் வசதியை கேள்விப்பற்றிருப்போம் அல்லவா.அதனைப்போலவே இதன் மூலம் வாய்ஸ் கால் வசதியினை மேற்கொள்ளலாம்.மேலும் இதன் வழியாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க
'நைட் மோட்'-ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ள ஒன்றா?


Click it and Unblock the Notifications