Home
News

கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்!

ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியானது. அதாவது இந்த 2025-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை.

இப்போதும் கூட மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் கூடிய விரைவில் 4G சேவையைக் கூட அறிமுகம் செய்ய உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளைத் தரும் மூன்று திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இங்கே அந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி BSNL திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும்.எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆனால் தினமும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆகு குறைகிறது.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். பின்பு தினமும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆகு குறைகிறது.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Three BSNL plans that offer long validity and high data benefits on a budget: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X