ஜியோ சிம் இருக்கா.. 365 நாள் வரை வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. அள்ளி தரும் 3 பிளான்கள்..
ஜியோ (Jio) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3999 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

ஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.
தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறையும்.


Click it and Unblock the Notifications








