Home
News

பிஎஸ்என்எல் சிம் இருக்கா? கம்மி விலை.. 84 நாள் வரை வேலிடிட்டி, தினமும் 3ஜிபி டேட்டா, அள்ளி தரும் 3 பிளான்கள்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். கம்மி விலையில் அதிக சலுகைகள் வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் சிம் இருக்கா? கம்மி விலை.. அள்ளி தரும் 3 பிளான்கள்..

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 45 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த
பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 299 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Three best bsnl plans that offer high data, OTT, long validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X