வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நீங்களும் இப்படி ஏமாறாதீர்கள்!
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் ஏணைய வீடுகள் காலியாகியுள்ளன. இந்த நிலையில் வீடு வாடகை மற்றும் லீசுக்கு உள்ளதாக ஆன்லைன் விளம்பரங்கள் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இதையடுத்து வேறொரு ஊரில் இருந்து சென்னையில் வாடகை வீட்டிலும் சொந்த வீட்டில் தங்கி வேலை செய்து வந்தவர்கள் சொந்த வீட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏணைய வீட்டு வாசலில் டூலெட் போர்டுகள்
இதையடுத்து சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் வீடு கிடைப்பதே குதிரைக் கொம்பு என்று கூறப்படும் பகுதிகளில் இப்போது வீடு காலியாக உள்ளது. ஓஎம்ஆர், நீலாங்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் ஏணைய வீட்டு வாசலில் டூலெட் போர்டுகள் காணப்படுகிறது.

டூலெட் விஷயங்களில் மோசடி
அனைத்து சூழ்நிலைகளையும் தங்களுக்கு சாதகமாக்கும் மோசடிக் கும்பல்கள் இப்போது இந்த டூலெட் விஷயங்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகள் வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு விடுவதாக விளம்பரங்கள் அளித்து அதன்மூலம் பண மோசடி செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

வெளியூர் மற்றும் வெளிநாட்டு உரிமையாளர்களின் வீடுகள்
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிமையாளர்களின் வீட்டை குறிவைத்து லீசுக்கு விடுவதாக வீட்டு வாடகை மற்றும் விற்பனை தொடர்பான விளம்பரத் தளங்களில் விளம்பரங்கள் புகைப்படத்துடன் பதிவுடுகின்றன.

4 லட்சம் முதல் ஒப்பந்தப் பத்திரிக்கை
இந்த விளம்பரங்களை பார்த்துவிட்டு அழைப்புவிடுக்கும் வாடிக்கையாளர்களை நேரில் அழைத்து சென்று காண்பித்து வீட்டின் தன்மைக்கு ஏற்ப 4 லட்சம் முதல் 10 லட்சத்துக்கும் மேல் ஒப்பந்தபத்திரம் மேற்கொண்டு பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

போலீஸில் புகார்
பின், சில நாட்களில் உண்மையான வீட்டு உரிமையாளர்கள் வந்தபிறகு தான் வீட்டில் குடியிருப்பவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணர்கிறார்கள். இதுபோன்ற மோசடியில் ஏமாற்றப்பட்ட 90-க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ரியல் எஷ்டேட் நிறுவனமான சன்ஷைன் பிராபர்டி டெவலப்பர் என்ற பெயரில் தாம்பர் பகுதியில் நடத்தி வந்த பிரகாஷ், காயத்ரி, விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த கும்பல் மடிப்பாக்கம், சேலையூர், பம்மல் போன்ற பகுதியில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

செல்போன் எண்ணை மாற்றி மீண்டும் மோசடி
மோசடி செயல் முழுவதுமாக நிறைவேறிய பிறகு பணம் கைக்கு வந்தவுடன் செல்போன் எண்ணை மாற்றிவிட்டு மீண்டும் மோசடியை தொடங்கிவிடுவார்கள். இந்த கும்பல் 3 ஆண்டுகளில் சுமார் 2 கோடி வரை மோசடி செய்து சம்பாதித்தது தெரிய வந்துள்ளது.

உண்மை தன்மையை பரிசோதிக்கும்படி அறிவுறுத்தல்
இந்த பணத்தை மோசடி கும்பல் சில படங்களில் தயாரிப்பாளாரகாவும் முதலீடு செய்துள்ளனர். ஆன்லைன் தளங்களில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை சோதித்து அதன் உண்மை தன்மையை பரிசோதித்து வீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்படி போலீஸார் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications