Just In
- 3 min ago
சிறந்த அம்சங்களோடு Mi Notebook 14(IC) லேப்டாப் அறிமுகம்: விலை இவ்வளவுதானா?
- 2 hrs ago
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?
- 3 hrs ago
வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.!
- 4 hrs ago
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?
Don't Miss
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- News
நான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்
- Finance
அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா?
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Movies
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலையில் போலி சோனி டிவி விற்பனை: 3 பேர் கைது.! சிக்கியது எப்படி?
இப்போது வரும் ஸ்மார்ட் டிவிகளின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சியோமி, சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்ப்படுகிறது, காரணம் சிறந்த தரம் தான்.

இந்நிலையில் திருச்சி பகுதியில் மலிவு விலைக்கு சோனி டிவி தருவதாக போலி சோனி டிவியை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து சுமார் 153 டிவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர், திருச்சி பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள திருச்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற கடையில் 32-இன்ச் சோனி டிவி மாடலை 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய அந்த 32-இன்ச் டிவி மாடலுக்கு பில் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதீத மர்மங்கள் நிறைந்த "லோனார் ஏரி"- சர்வதேச ராம்சர் பட்டியலில் இணைப்பு: அடுத்தது என்ன?

பின்பு வீட்டிற்கு புதிய டிவியை கொண்டு சென்ற அவர் ஆன் செய்தபோது டிவி ஆன் ஆகவில்லை. உடனே இதுகுறித்து அந்நிறுவனத்தில் கேட்டபோது சோனி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் சென்று பழுது பார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு சென்று கேட்டபோது இது தங்களுடைய கம்பெனி டிவி அல்ல என்றும், இதில் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியதை அடுத்து, பாலக்கரை காவல் நிலையத்தில் சவுக்கத் அலி புகார் அளித்தார்.

அதன்பின்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோனி பெயரில் இருந்த அனைத்து டிவிகளும் போலி ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டி விற்கப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த 153 டிவிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், பீமநகர் கண்டிதெருவை சேர்ந்த நிஜாமுதீன் (30), முகமது பைசல் (21) பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சோனி நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பறிமுதல் செய்த இந்த டிவிகளை நேரடியாக பார்த்து சான்றிதழ் அளிக்க உள்ளனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சோனி டிவிகளின் விலை மற்ற டிவிகளின் விலையை விட சற்று உயர்வாக இருக்கும். பின்பு சிறந்த தரம் மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் தான் சோனி டிவி விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190