மலிவு விலையில் போலி சோனி டிவி விற்பனை: 3 பேர் கைது.! சிக்கியது எப்படி?

|

இப்போது வரும் ஸ்மார்ட் டிவிகளின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சியோமி, சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்ப்படுகிறது, காரணம் சிறந்த தரம் தான்.

 பகுதியில் மலிவு விலைக்கு

இந்நிலையில் திருச்சி பகுதியில் மலிவு விலைக்கு சோனி டிவி தருவதாக போலி சோனி டிவியை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து சுமார் 153 டிவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பீமநகர் பழைய தபால் நிலைய சாலையி

குறிப்பாக திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர், திருச்சி பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள திருச்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற கடையில் 32-இன்ச் சோனி டிவி மாடலை 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய அந்த 32-இன்ச் டிவி மாடலுக்கு பில்எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதீத மர்மங்கள் நிறைந்த அதீத மர்மங்கள் நிறைந்த "லோனார் ஏரி"- சர்வதேச ராம்சர் பட்டியலில் இணைப்பு: அடுத்தது என்ன?

வீட்டிற்கு புதிய டிவியை கொண்டு

பின்பு வீட்டிற்கு புதிய டிவியை கொண்டு சென்ற அவர் ஆன் செய்தபோது டிவி ஆன் ஆகவில்லை. உடனே இதுகுறித்து அந்நிறுவனத்தில் கேட்டபோது சோனி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் சென்று பழுது பார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெனி டிவி அல்ல என்றும், இதில்

தொடர்ந்து அந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு சென்று கேட்டபோது இது தங்களுடைய கம்பெனி டிவி அல்ல என்றும், இதில் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியதை அடுத்து, பாலக்கரை காவல் நிலையத்தில் சவுக்கத் அலி புகார் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய

அதன்பின்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோனி பெயரில் இருந்த அனைத்து டிவிகளும் போலி ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டி விற்கப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த 153 டிவிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், பீமநகர் கண்டிதெருவை சேர்ந்த நிஜாமுதீன் (30), முகமது பைசல் (21) பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக சோனி நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பறிமுதல் செய்த இந்த டிவிகளை நேரடியாக பார்த்து சான்றிதழ் அளிக்க உள்ளனர்.

என்றால், சோனி

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சோனி டிவிகளின் விலை மற்ற டிவிகளின் விலையை விட சற்று உயர்வாக இருக்கும். பின்பு சிறந்த தரம் மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் தான் சோனி டிவி விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Three arrested for Selling Fake Sony TVs at Budget Price!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X