Home
News

இனிமே குறைஞ்சது ரூ.499 கொடுத்தா தான் கிடைக்கும்.. Airtel ரூ.399 திட்டத்தில் இருந்து முக்கிய நன்மை நீக்கம்!

ஜியோவுக்கு போட்டியாக அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கி விட்டது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் மூன்று அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அந்த திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கி வந்தது. ஆனால் இனிமேல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வேண்டும் என்றால் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது ஏர்டெல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் திட்டங்களைப் பார்ப்போம்.

Airtel ரூ.399 திட்டத்தில் இருந்து முக்கிய நன்மை நீக்கம்!

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்: 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்: 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது இந்த திட்டம். அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. பின்பு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் சில ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

Airtel ரூ.399 திட்டத்தில் இருந்து முக்கிய நன்மை நீக்கம்!

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Three Airtel prepaid plans that offer Disney+ Hotstar subscription: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X