ஓ.. த்ரெட்ஸ் vs டிவிட்டர் இல் இது தான் வேறுபாடு-ஆ! எளிமையாக த்ரெட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப்பின் (WhatsApp) உரிமையாளரான மெட்டா (Meta) புதன்கிழமை அதன் சமீபத்திய சேவையான த்ரெட்ஸ் (Threads) என்றழைக்கப்பட்டும் புது சேவையை அறிமுகம் செய்தது. த்ரெட்ஸ்-க்கு பதிவுசெய்ய உங்களுக்கு இன்ஸ்டாகிராம் கணக்கும் தேவை.
புதிய பயன்பாட்டின் முதன்மை கவனம் ஷார்ட் நோட்ஸ் பதிவுகளாகும். பயனர்கள் 500 எழுத்துகள் வரை இடுகையிடலாம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்களைப் பகிரலாம். மார்க் ஜுக்பெர்க் (Mark Zuckerberg) இன் புதிய த்ரெட்டில், விர்ச்சுவல்-ரியாலிட்டி அல்லது கால் இல்லாத 3D அவதாரங்கள் என்று எதுவுமே இல்லை. இன்டர்நெட் பிரியர்களுக்கான பழைய பாணியிலான வார்த்தைகளை நல்ல நாகரீகமான சமூக ஊடக உள்ளடக்கத்தில் இது வழங்குகிறது.

பொது நபர்களும் படைப்பாளிகளும் குறிப்பாக Twitter-க்கு மாற்றாக ஒரு தளத்தை அனைவரும் தேடி வருகிறார்கள். அக்டோபரில் மஸ்க் ட்விட்டரைக் கையகப்படுத்தியதிலிருந்து, நிறுவனம் பல தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதன் ப்ளூ-செக்-மார்க் சரிபார்ப்புக் கொள்கைகளை கூட நிறுவனம் மாற்றியது. டிவிட்டர் உள்ளடக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதற்காக பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது.
கடந்த வார இறுதியில், பயனர்கள் எத்தனை இடுகைகளைப் பார்க்க முடியும் என்பதை கூட மஸ்க் வரம்பிட துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களால் மக்கள் டிவிட்டருக்கு மாற்றாக ஒரு தளத்தை தேடி வருகின்றனர். இவர்களுக்கு த்ரெட்ஸ் ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளது. சாரும் இந்த புதிய மெட்டா த்ரெட்ஸ் ஆப்ஸை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். அதேபோல், டிவிட்டர் மற்றும் த்ரெட்ஸ் ஆப்ஸிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன என்று பார்க்கலாம்.
டிவிட்டர் மற்றும் த்ரெட்ஸ் ஆப்ஸிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றி பேசுகையில், இவை இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தோற்றத்தை தான் கொண்டுள்ளது. இதன் செயல்படும் ஏறக்குறைய ஒரே மாதிரியானதாக தான் இருக்கிறது. இது உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்கப்படுவதால், உங்கள் நண்பர்களை கண்டறிவதில் சிக்கல் இருக்காது. நீங்கள் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த நபர்களும் த்ரெட்ஸ் கணக்குடன் இணைக்கப்படுவார்கள்.

டிவிட்டர் போல இங்கு ஒரு நாளைக்கு 600 முதல் 6000 போஸ்ட் மட்டுமே பார்க்க முடியும் என்ற வரம்பே கிடையாது. வெரிஃபைட் மற்றும் வெரிஃபைட் இல்லாத கணக்குகளுக்கு என்று தனி-தனி விதிமுறைகள் என்று எதுவும் கிடையாது. இன்னும் த்ரெட்ஸ் ஆரம்பகட்டத்தில் இருப்பதனால், எதிர்காலத்தில் இன்னும் அதிக அம்சங்களை பெரும் என்று கூறப்படுகிறது. நீங்கள் பின்தொடரும் மற்றும் தளத்தில் வைரலாகும் போஸ்ட்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
த்ரெட்ஸ் இல் எடிட் பட்டன் கிடையாது. ஒருமுறை போஸ்ட் செய்துவிட்டால் மறுமுறை எடிட் செய்ய முடியாது. 500 கேரக்டர் மட்டுமே டைப் செய்ய அனுமதி உண்டு. வெவ்வேறு அக்கௌன்ட் நபர் விபரங்களை சர்ச் செய்யலாம். ஆனால், ஹாஷ்டேக் அல்லது கண்டன்ட் வார்த்தைகளை வைத்து த்ரெட்ஸ் இல் சர்ச் செய்ய முடியாது. த்ரெட்ஸ் தளத்தில் டைரக்ட் மெசேஜ் அனுப்ப முடியாது. இப்போதைக்கு இந்த தளத்தில் விளம்பரங்கள் என்று எதுவுமில்லை.
த்ரெட்ஸ் பயன்படுத்த iOS அல்லது ஆண்ட்ராய்டு ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து த்ரெட்ஸ் ஆப்ஸை நீங்கள் தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்களிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பது அவசியமானது. மற்ற அணைத்து முறைகளும் மிகவும் எளிமையானது ட்ரை செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications








