Home
News

7 மாதங்களாக அமேசான் பெயரில் போலி கால் சென்டரை நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி.!

உலகம் முழுவதும் அமேசான் வலைத்தளத்ததை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதிலும் ஸ்மார்ட்போன்கள்,லேப்டாப்
போன்ற சாதனங்களை இந்த தளத்தில் எளிமையாக வாங்க முடியும்.

ல் அமேசான் நிறுவனத்தின் பெயரில்

இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலி கால் சென்டர் ஒன்றை நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 தகவலின்படி, டெல்லி

வெளிவந்த தகவலின்படி, டெல்லி அருகே இருக்கும் சுல்தான்புர் எனும் பகுதியில் 5 பெண்கள் உட்பட 26 பேர் அமேசான்நிறுவனத்தின் பெயரில் போலி கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த போலி கால் சென்டரில் இருப்பவர்கள்VOIP என்ற சட்டவிரோத தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆப் பயனர்களுக்கு போன்செய்துள்ளனர். அந்தசமயம் அவர்களது செல்போன் ஐ.டி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

போலி கால் சென்டரை 7

குறிப்பாக இந்த போலி கால் சென்டரை 7 மாதங்களாக நடத்தி வந்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு 5 பேர் வரை இவர்கள்
ஏமாற்றியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. மொத்தமாக 1250 பேர் இவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

1250 நபர்களை ஏமாற்றி இ

மேலும் 1250 நபர்களை ஏமாற்றி இதுவரை 4 கோடி ரூபாய் வரை இந்த கும்பல் சம்பாதித்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போலி கால் சென்டர் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

சென்று சோதனை நடத்த

பின்பு அங்கு சென்று சோதனை நடத்த சென்றுள்ளனர், அப்போது தொலைபேசி மூலம் பேசி ஏமாற்றிக் கொண்டிருந்ததை கையும் களவுமாக போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்த 29 கணினி, 2 இணைய மோடம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணையில் கால் சென்டர்

அதன்பின்பு நடந்த விசாரணையில் கால் சென்டர் நடத்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் டெல்லியில் அமேசான் பெயரில் போலி கால் சென்டர் நடத்தி பணம் மோசடி செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Those who run a fake call center in the name of Amazon in Delhi have been arrested: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X