கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 'ஜாபி' ரோபோட்! மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

|

கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான மருந்து, உணவு வழங்கும் பணியில் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கும் கொரோனா தோற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ரோபோக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யமுடியும் என்பதினால், இனி ரோபோட்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

'ஜாபி' என்னும் ரோபோ

'ஜாபி' என்னும் ரோபோ

இதனைத் தொடர்ந்து திருச்சியிலுள்ள புரொபல்லர் டெக்னாலஜிஸ் என்ற டிரோன் மற்றும் ரோபோக்களை வடிவமைத்து உருவாக்கும் தனியார் நிறுவனம், 'ஜாபி' என்னும் ரோபோவை தயாரித்து அரசுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. வாய்ஸ் இன்ட்ராக்டிவ் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக கன்ட்ரோல் செய்யப்படும் ஜாபி வகை ரோபோக்களின் முன்னோட்டம் கடந்த 29ம் தேதி மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் நடந்தேறியுள்ளது.

தானே கொண்டு செல்லும் கருவி

தானே கொண்டு செல்லும் கருவி

கோவை, கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வரும் மதன்குமார் இந்த ஜாபி என்ற சிறிய வகையிலான இயந்திரத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்.`Internet of things' எனப்படும் டெக்னாலஜி மூலமா கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் வகையிலான `தானே கொண்டு செல்லும் கருவி' என்ற இந்த கருவியைத் தான் உருவாகியுள்ளது அவர் கூறியுள்ளார்.

BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!

3 முதல் 4 கிலோ எடையை சுமக்கும் ரோபோட்

3 முதல் 4 கிலோ எடையை சுமக்கும் ரோபோட்

இந்த ஜாபி ரோபோட் இன்டெர்நெட் மூலம் ப்ளிங்க் ஆப் (Blynk App) உதவியுடன் wifi வளையத்திற்குள் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை எளிதாகக் கண்காணிக்க முடியும். மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள கூடை மூலம் தனிமைப்படுத்தப்பட்டவரின் அறைக்கு அந்த நபருக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருள்கள் என 3 முதல் 4 கிலோ எடை வரையுள்ள பொருள்களை அனுப்ப முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கூடுதல் அம்சங்களும் இணைக்க முடியும்

கூடுதல் அம்சங்களும் இணைக்க முடியும்

இந்த ஜாபி ரோபோட் 360 டிகிரியிலும் இயங்கக்கூடியது, பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க இதில் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரத்தை வெறும் ரூ.1500 செலவில் மதன்குமார் உருவாக்கியுள்ளார். மேலும் இதில் லைட், சென்சார், மேடு மற்றும் பலம் ஆகிய இடங்களில் செயல்படும் விதத்தில் மேம்படுத்த ரூ.18,000 முதல் 20,000 வரை செலவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏர்டெல் நிறுவனத்தின் மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்கள் இதுதான்.!ஏர்டெல் நிறுவனத்தின் மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்கள் இதுதான்.!

கடம்பூர் ராஜு பாராட்டு

கடம்பூர் ராஜு பாராட்டு

அதேபோல், இந்த கருவியைக் கொண்டு விவசாய நிலங்கள், வனத்துறை பகுதிகளில் உள்ள ஆபத்தான விலங்களின் நடமாட்டம், விலங்குகள் பதுங்கியிருக்கும் இடங்கள் குறித்தும் கண்காணிக்க உதவும் என்கிறார் மதன்குமார். இதன் செயல் விளக்கத்தை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன் ஆகியோர் பார்வையிட்டனர். செயல் விளக்கத்திற்குப் பிறகு, மதன்குமாரை அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Thoothukudi Engineer Created Joby Robot For Helping Corona Infected Patients : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X