டிவி விற்பனையை தொடங்கவுள்ளது பிரபலமான இந்த நிறுவனம்.!
பிரபலமான பிரெஞ்சு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பிராண்டான தாம்சன் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் டிவிகளின் விற்பனையை பிளிப்கார்ட் வழியாக தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

குறிப்பாக அரசுவிதிமுறைகளின் படி நாட்டில் நியமிக்கப்பட்ட ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டுமே விநியோகங்கள் வழங்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் கண்டிப்பாக கவனிக்கப்படுகின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தை ஒரளவு திறந்திருக்கும் போது, இந்திய நுகர்வோரின் தேவை அதிகரிக்கும் என்றுநிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதை நிறைவேற்ற ஸ்டாக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தாம்சன் சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் பிரத்யேகமாக உரிமம் பெற்றுள்ளது. இந்நிறவனம்கார்ப்பரேட் அலுவலக நடவடிக்கைகளை 33சதவிகிதம் மனித திறனுடன் தொடங்கியுள்ளதாகவும், அரசாங்கம் வகுத்துள்ளவிதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

தாம்சன் தொலைக்காட்சிகளின் பிரத்யேக பிராண்ட் உரிமதாரர்SPPL இன் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா அவர்கள், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்கிய அரசுக்கு நன்றி. அவை அனைத்து மண்டலங்களுக்கும்அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்க அனுமதி கொடுக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு இந்நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

தாம்சன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள மாடல்களின் வரிசை- 43-இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி(43டிஎம்4377), 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099), 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) ஆகும்.

தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி
தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை எல்ஜி ஐபிஎஸ் பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி-டி720ஜிபியூ ஆதரவு மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099)
தாம்சன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் 10வாட் ஸ்பீக்கர் மற்றும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277)
தாம்சன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) பொதுவாக எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications