Home
News

உங்கள் வீட்டை சிம்லாவாக மாற்றலாம்.. அசுர சக்தி.. 90 அடி தூரம் வரை சில் காற்று.. இனி வெயில் பற்றி கவலையில்லை..

தாம்சன் (Thomson) நிறுவனம் இப்போது இந்தியாவில் 4 புதிய ஏர் கூலர் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. ரூ.3,000 விலை புள்ளி முதல் உங்கள் வீட்டை இந்த சாதனங்கள் குளிர்ச்சியடைய செய்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

தாம்சன் (Thomson): இந்த 4 ஏர் கூலர் மாடல்கள் 28L முதல் 150L லிட்டர் வரையிலான கொள்ளளவு உடன் வருகிறது. இவை 90 அடி தூரம் வரை சில் காற்றை வீசும் திறன் கொண்டவை என்று தாம்சன் கூறியுள்ளது. இந்த 4 ஏர் கூலர் மாடல்களில் 3 மாடல்கள் டெஸர்ட் சீரிஸ் மாடலின் கீழ் வருகிறது. இந்த தொடர் BLDC மோட்டார் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

உங்கள் வீட்டை சிம்லாவாக மாற்றலாம்.. அசுர சக்தி.. ஃபுல் சில் காற்று..

ரூ.3000 விலை புள்ளியில் ஏர் கூலர்: உங்கள் கரண்ட் பில்லை குறைப்பதோடு அதிக சில் காற்றை இந்த தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. இந்தியாவில் புதிய தாம்சன் ஏர் கூலர்களின் அம்சங்கள் மற்றும் விலையைப் பற்றி இப்போது பார்க்கலாம். புதிய தாம்சன் ஏர் கூலர்களின் விலை இந்தியாவில் ரூ.3,999 முதல் தொடங்குகிறது. இந்த விலை புள்ளியில் கிடைக்கும் முதல் மாடலாக தாம்சன் 28L பர்சனல் ஏர் கூலர் திகழ்கிறது.

எத்தனை மாடல் இந்த சீரிஸ் இல் அறிமுகம்: இந்த புதிய Thomson 28 L Personal Air Cooler மாடல் வெள்ளை நிறத்தில் 28 லிட்டர் கொள்ளளவுடன் ரூ.3,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்தபடியாக, டெஸர்ட் செரிஸ் வரிசையில் Thomson XL Heavy Duty 105 L Desert Air Cooler (Grey, HD105) கிரெய் நிறத்தில் ரூ.9,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. இது 105 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது.

150 லிட்டர் ஏர் கூலர் மாடல்: இதற்கு அடுத்தபடியாக, Thomson XXL Heavy Duty 115 L Desert Air Cooler (Grey, HD115) என்ற மாடல் 115 லிட்டர் கொள்ளளவுடன் ரூ.10,299 விலையில் வருகிறது. இறுதியாக, Thomson Super Heavy Duty 150 L Desert Air Cooler (Grey, HD150) என்ற மாடல் 150 லிட்டர் கொள்ளளவுடன் ரூ.14,999 விலையில் வருகிறது.

உங்கள் வீட்டை சிம்லாவாக மாற்றலாம்.. அசுர சக்தி.. ஃபுல் சில் காற்று..

எப்போது பிளிப்கார்ட் விற்பனை துவங்கும்? தாம்சனின் இந்த புதிய ஏர் கூலர் மாடல்கள் மார்ச் 23, 2024 முதல் Flipkart இல் கிடைக்கும். 28 லிட்டர் கொள்ளளவுடன் வெளிவந்த மாடல் சிறிய காம்பாக்ட் ரூம்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த மாடல் 2600rpm மோட்டார் சக்தியுடன் 25 அடி தூரம் வரை சில் காற்றை வீசுகிறது. இது 5 பிளேடுகளுடன் வருகிறது. இது இன்வெர்ட்டர்களுடன் இணக்கமான அம்சத்துடன் வருகிறது.

90 அடி தூரம் வரை சில் காற்று: டெஸர்ட் சீரிஸ் வரிசையில் வரும் 3 மாடல்கள் முறையே 105, 115, 150 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளன. இந்த மூன்று மாடல்களும் BLDC மோட்டார் ஆதரவுடன் வருகிறது. இது குறைந்த மின் செலவை உறுதி செய்வதோடு, அதிக காற்றை வீசுகிறது. இந்த மாடல்கள் முறையே 45 அடி, 50 அடி, மற்றும் 90 அடி வரை காற்றை வீசுகிறது.

1 வருட வாரண்டி: தாம்சன் டெசர்ட் ஏர் கூலர்கள் ஆட்டோ ஸ்விங் மற்றும் ஆட்டோ பம்ப் போன்ற வழக்கமான அம்சங்களுடனும் வருகின்றன. தாம்சன் நிறுவனம் அதன் அனைத்து புதிய ஏர் கூலர்களுக்கும் 1 வருட விரிவான உத்தரவாதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson Personal and Desert Series Air Coolers Price and Specifications Sale Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X