32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.9,999 மட்டுமா? என்ன பிராண்ட் எப்போ வாங்கலாம்? இதோ முழு விபரம்

|

புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? அப்போ இந்த மாடலை பார்த்துவிட்டு உங்கள் தேர்வை இறுதியாக முடிவு செய்யுங்கள். புதிய ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு உங்கள் பட்ஜெட் எவ்வளவாக இருந்தாலும் சரி, இந்த மாடலை பார்த்த பிறகு உங்களின் முடிவில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது எங்களின் நம்பிக்கை.

32 இன்ச் கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி

32 இன்ச் கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி

காரணம், 32 இன்ச் கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் டிவியை நீங்கள் வெறும் ரூ.9,999 என்ற விலையில் வாங்கிட முடியும். எது? 32 இன்ச் கொண்ட புது ஸ்மார்ட் டிவி மாடல் வெறும் ரூ.9,999 விலைக்கு வாங்கக் கிடைக்கிறதா என்று நீங்கள் ஷாக் ஆகலாம். நீங்கள் மீண்டும்-மீண்டும் இந்த வாக்கியத்தை எப்படிப் படித்தாலும் உண்மை இது தான். இந்த விலையில் புது ஸ்மார்ட் டிவியை எப்படி? எப்போது வாங்குவது என்று தெளிவாகப் பார்க்கலாம்.

Thomson ஆல்பா சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்

Thomson ஆல்பா சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்

பிரெஞ்சு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் நிறுவனமான தாம்சன் (Thomson) மூலம் இந்த வாய்ப்பு நம்மை எட்டியுள்ளது. Thomson நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் 32 இன்ச் அளவு கொண்ட ஆல்பா சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நம்ப முடியாத மலிவு விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பெசல் இல்லாத மிரட்டலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு OS உடன் இயங்குகிறது.

எப்போது? எங்கே வாங்க கிடைக்கும்?

எப்போது? எங்கே வாங்க கிடைக்கும்?

மேலும், இந்த விலை மலிவான புதிய ஸ்மார்ட் டிவி சாதனத்தில் யூடியூப், பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5, ஈரோஸ் நவ் மற்றும் பல ஆப்ஸ்கள் உள்ளன என்று நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஜூன் 26 முதல் பிளிப்கார்ட்டில் ரூ.9,999 விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் SBI வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி 10% தள்ளுபடியைப் பெற முடியும். இத்துடன் இலவச கானா பிளஸ் சந்தா உட்படப் பல நன்மைகளைப் பெற முடியும்.

தாம்சன் 32 இன்ச் ஆல்பா சீரிஸ் ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்

தாம்சன் 32 இன்ச் ஆல்பா சீரிஸ் ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்

தாம்சன் வழங்கும் 32 இன்ச் ஆல்பா சீரிஸ் டிவியானது HD திறன் கொண்ட 1366 x 768 பிக்சல்கள் ரெசல்யூஷன் உடைய டிஸ்பிளேயுடன் வருகிறது. இது பல வண்ணங்கள் ஆதரிக்கும் தொழில்நுட்பத்துடன் பெசல் இல்லாத டிஸ்பிளேயுடன் வருகிறது. மேலும், இந்த புதிய ஸ்மார்ட் டிவி மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்குவதற்காக 30W ஸ்பீக்கர் உடன் வருகிறது. மலிவு விலையில் சிறந்த வீடியோ மற்றும் ஆடியோ அனுபவத்தை இந்த சாதனம் வழங்குகிறது.

100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்

 காஸ்ட் ஷேரிங் அம்சம் கூட இருக்கிறதா?

காஸ்ட் ஷேரிங் அம்சம் கூட இருக்கிறதா?

உங்கள் ஸ்மார்ட் டிவியில் உங்கள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் மற்றும் உங்கள் லேப்டாப்பின் திரையைக் காட்ட உதவும் விரைவான காஸ்ட் ஷேரிங் அம்சம் கூட இந்த டிவி உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த தாம்சன் ஆல்பா சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாலி குவாட் கோர் ஜிபியு செயலி மற்றும் அம்லாஜிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் இன்பில்ட் கூகுள் பிளே ஸ்டோரும் இருக்கிறது. இன்னும் ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளது.

ஆப்ஸ் மற்றும் இணைப்பு அம்சங்கள்

ஆப்ஸ் மற்றும் இணைப்பு அம்சங்கள்

அதேபோல், இதில் Amazon Prime, Sony Liv மற்றும் Zee5 போன்ற 5000க்கும் மேற்பட்ட ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு வரம்பற்ற அணுகலும் கிடைக்கிறது. இணைப்பு அம்சங்களை பொறுத்த வரையில் இதில் 2 x USB போர்ட்கள், 3 x HDMI போர்ட்கள், 2.4Ghz Wi-Fi, ஹெட்ஃபோன் ஜாக், RF இன்புட்/அவுட்புட், 1 x RJ45 போர்ட் மற்றும் ஒரு உபகரண உள் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி 4ஜிபி உள்ளடங்கிய ஸ்டோரேஜ் மற்றும் 512 MB ரேம் உடன் வருகிறது.

சோனி பிராவியா X80K தொடர்

சோனி பிராவியா X80K தொடர்

சமீபத்திய, சோனி நிறுவனம் கூட இந்தியாவில் X80K தொடரின் கீழ் ஸ்மார்ட் டிவிகளின் தொகுப்பை வெளியிட்டது. பிராவியா X80K தொடர் ஸ்மார்ட் டிவிகள் 75 இன்ச், 65 இன்ச், 55 இன்ச், 50 இன்ச் மற்றும் 43 இன்ச் ஆகிய ஐந்து டிஸ்பிளே விருப்பங்களில் வெளி வருகிறது. Sony Bravia X80K மாடல்கள் Dolby Audio, Dolby Atmos மற்றும் DTS Digital Surround ஆகியவற்றுக்கான ஆதரவுடன் இரட்டை 10W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளன. ஆனால், இதன் விலை சற்று அதிகமாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது பற்றிய கூடுதல் விபரங்களை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Thomson Launches 32 Inch Alpha Series Smart TV In India At Rs 9999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X