உங்கள் மென்மையான கையை அலங்கரிக்க வருகிறது இந்த எலக்ட்ரானிக் டச்-பேட்

By Super Admin
|

இதுவரை நாம் கேம் விளையாட வேண்டுமென்றால் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனையோ அல்லது கம்ப்யூட்டரையோ பயன்படுத்தி வந்தோம். ஆனால் இனிமேல் இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை பாஸ்! உங்களுக்காகவே டெக்னாலஜி வித்தகர்கள் கையில் கைக்கடிகாரம் போல கட்டிக்கொண்டே விளையாடும் டச் பேட் என்ற சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உங்கள் மென்மையான கையை அலங்கரிக்க வருகிறது இந்த எலக்ட்ரானிக் டச்-பேட்

இதை நீங்கள் ஒரு கையில் வாட்ச் போல கட்டிக்கொண்டு இன்னொரு கையால் கேம் விளையாடலாம், அல்லது டைப் அடிக்கலாம், மேலும் ஒரு கம்ப்யூட்டரில் என்னென்ன செய்வீர்களோ இவை அனைத்தையும் செய்யலாம். ஏற்கனவே சந்தையில் உள்ள கையில் கட்டும் டச்பேட் சாதனங்கள் அடர்த்தியான உலோகங்கள் அல்லது ரப்பர்களால் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதில் உள்ள கார்பன் நானோ டியூப்ஸ் மற்றும் ஒருசில உலோகங்கள் உங்கள் கையை பதம் பார்த்திருக்கும். ஆனால் இந்த டச் பேட் உபகரணம் மிக மெல்லிய ஹைட்ராஜெல்லினால் உருவாக்கப்பட்டிருப்பதால் உங்கள் கைக்கும் பாதுகாப்பு என்று கூறுகிறார் இதை வடிவமைத்த தென்கொரியாவின் சியோல் நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சாங் சான் கிம்.

கூட்டு சேரும் நிறுவனம் : அதிர வைக்கும் புகிய வியூகம்..!

இந்த டச் பேட் ஒரு கன்னிப்பெண் கையை தொடுவது போல மென்மையாக இருப்பதால் சந்தையில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு விரலால் இந்த டச் பேட்-ஐ தொட்டால் உடனே அதிலுள்ள ஹைட்ராலிக் ஜெல் டச் பேட்-இன் இரண்டு முனைகளில் உள்ள எலக்ட்ரானிக் சிக்னலுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு சேவை செய்ய தயாராகிவிடும். ஹைட்ராஜெல்லினால் வடிவமைக்கப்பட்ட பேனலில் இருந்து சீரான வோல்ட்டேஜில் இந்த டச் பேனல் செயல்படுவதால் எந்தவித ஆபத்தும் இன்றி நீங்கள் இந்த டச் பேட்'ஐ உபயோகிக்கலாம். இந்த டச் பேட் உடன் உங்களுக்கு ஒரு மென்மையான ஸ்டிக் கொடுக்கப்படும். அதன் மூலம் நீங்கள் படம் வரையலாம். பாடங்கள் எழுதலாம். வீட்டுச்செலவு கணக்கை பார்க்கலாம். கதை எழுதலாம். வேறு என்னென்ன உங்களுக்கு தேவையோ இவை அனைத்தையும் கையில் கட்டியுள்ள இந்த டச் பேடில் நீங்கள் எழுதிக்கொள்ளலாம்.

உங்கள் மென்மையான கையை அலங்கரிக்க வருகிறது இந்த எலக்ட்ரானிக் டச்-பேட்

மனிதனுக்கும் கம்ப்யூட்டருக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகிக்கொண்டே வருவதால் வருங்காலத்தில் கையில் கட்டிக்கொள்ளும் வசதியுள்ள இந்த டச் பேட் பெரும் வரவேற்பை பெறும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மென்மை, பாதுகாப்பு, கைக்கு அடக்கம், உபயோகிப்பதில் எளிமை என இத்தனை சிறப்பு அம்சங்கள் பொருந்தியுள்ளதால் கண்டிப்பாக அனைத்து தரப்பினர்களும் இந்த டச் பேட்-ஐ இனி தங்கள் உடலின் ஒரு அங்கமாக்கி கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

பெரிய போன், பெரிய பீச்சர்கள் ஆனா விலை கம்மி தான்.!!

என்ன பாஸ்!! இனிமேல் கேம் விளையாட மொபைல் போனையோ, கம்ப்யூட்டரையோ தேடுவீர்களா?

Best Mobiles in India

Read more about:
English summary
Researchers have developed a wearable touch screen panel that is highly stretchable and can be used to write words and play electronic games.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X