டெய்லி 2GB போக தினமும் 6 மணி நேர Unlimited Data.. இப்படி ஒரு 30 நாள் ரீசார்ஜ் Vodafone கிட்ட மட்டுமே இருக்கு!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் காரணமாக ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரியாக 1 மாதம் / 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் திட்டங்களை அறிமுகப்படுத்தின.
1 மாத வேலிடிட்டி அல்லது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் வரும் ஒரு திட்டத்தையாவது வழங்குமாறு டிராய் கேட்டு கொண்டதன் விளைவாகவே எக்கச்சக்கமான 28 நாள் ரீசார்ஜ்களுக்கு மத்தியில் ஒரு சில 30 நாள் ரீசார்ஜ் அணுக கிடைக்கிறது. அவைகளில்.. வோடாபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ஒரு 30 நாள் திட்டத்திற்கு..ஈடு இணையே இல்லை என்றே கூறலாம்!

அது வோடபோன் ஐடியாவின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டமாகும். டிராய் விடுத்துள்ள கோரிக்கையின்படி எல்லாம் டெலிகாம் நிறுவனங்களுமே 30 நாள் வேலிடிட்டி திட்டத்தை வழங்குகின்றன. ஆனால் வோடாபோன் ஐடியாவை தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் தத்தம் திட்டங்களில் அன்லிமிடெட் நைட் டேட்டாவை வழங்கவில்லை. அதை செய்யம் ஒரே ஆப்ரேட்டர் விஐ (Vi) தான். கூடவே இது ரூ.379-ன் கீழ் விஐ ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளையும் வழங்குகிறது.
வோடபோன் ஐடியாவின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன்கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும். இப்படியான வழக்கமான நன்மைகளை விட இந்த திட்டத்தின் கூடுதல் நன்மை தான் இன்னும் ஸ்பெஷல்!
ரூ.379-ன் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) ஆகியவைகளை வழங்கும். பிங்கே ஆல் நைட் நன்மையானது ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை (6 மணி நேரத்திற்கு) வரம்பற்ற அளவிலான டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கும்.
வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவர் ஆனது வார நாட்களில் பயன்படுத்தாத மீதமுள்ள டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்த அனுமதிக்கும். டேட்டா டிலைட்ஸ் சலுகையானது பயனர்கள் 2ஜிபி வரையிலான எமர்ஜென்சி டேட்டாவை பெற அனுமதிக்கும். இதெல்லாமே முழுதாக 1 மாதத்திற்கு அணுக கிடைக்கும்.
அதாவது இந்த மாதத்தில் எந்த தேதியில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்கிறீர்களோ அடுத்த மாதத்தின் அதே தேதியில் இது காலாவதியாகும். எடுத்துக்காட்டாக, ஜனவரி 1 ஆம் தேதி இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தால், அடுத்த மாதத்தின் முதல் தேதியில், அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி வரை வேலிடிட்டி கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் 1 மாத காலரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்ய விரும்பவில்லை. இதைவிட மலிவான மாதாந்திர செலவில் 1 ஆண்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் வோடாபோன் ஐடியாவின் ரூ.1,999 ரீசார்ஜ் திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். இது மாதந்தோறும் ரூ.166 என்கிற செலவின்கீழ் 1 ஆண்டு அல்லது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது,
இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 24ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் உங்களுக்கு வேறு வழியே இல்லை, நீங்கள் விஐ சேவையின் கீழ் கிடைக்கும் டேட்டா ஒன்லி பேக்குகளை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டி ரூம். அவைகள் ரூ.26 (1.5ஜிபி), ரூ.33 (2ஜிபி) முதல் தொடங்குகின்றன.


Click it and Unblock the Notifications