Home
News

75GB ஃப்ரீ டேட்டா.. கூடவே இலவச ஹாட்ஸ்டார் சந்தா.. உண்மையாவே இது Vodafone பிளான் தானா!

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் நாடு முழுவதும் விரைவில் 5ஜி சேவையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vodafone Idea நிறுவனம்

Vodafone Idea நிறுவனம்

இந்நிலையில் Vodafone Idea நிறுவனம் அதன் பிரபலமான திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. இப்போது கூடுதல் டேட்டாவை பெற்ற அந்த திட்டம் என்ன? அதன் நன்மைகளை என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிரபலமான திட்டம்

பிரபலமான திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.3099 திட்டம் தான் கூடுதல் (போனஸ்) டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

மேலும் இந்த ரூ.3099 திட்டம் ஆனது ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தாவுடன் 75ஜிபி போனஸ் டேட்டாவையும் தற்போது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டம் Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies & TV VIP அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சலுகை நவம்பர் 15 முதல் நவம்பர் 30, 2022 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் சில திட்டங்களில் கூட போனஸ் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். அதேபோல் இப்போது ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் 50ஜிபி போனஸ் டேட்டாவை பெறமுடியும்.

 ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

குறிப்பாக ஐடியா ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies & TV VIP அணுகலையும் வழங்குகிறது.

 வோடபோன் ஐடியா ரூ.2899 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.2899 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 75ஜிபி போனஸ் டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.2899 திட்டத்தில்..

குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.2899 திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV VIP-க்கான இலவச அணுகல் மற்றும் Vi Hero அன்லிமிடெட் சலுகைகள் ஆகியவை கிடைக்கும். குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் போனஸ் டேட்டா சலுகை இன்னும் சில காலங்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
This Vodafone Idea Plan Offers 75GB Free Data along with free disney Plus hotstar Check Price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X